இலங்கையர் அனைவரும் பெருமைப்பட வேண்டும் - ஜமாஅத்தே இஸ்லாமியின் சுதந்திர தின செய்தி



சுதந்திரமான ஒரு ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம் என்பது இலங்கையர் அனைவரும் பெருமைபடக் கூடிய ஒன்று. காலணித்துவ ஆதிக்கத்திலிருந்த நாடுகள் பல்வேறு போராட்டங்கள், அர்ப்பணிப்புகளின் பின்னரே சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. எமது நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்ட அனைவரையும் பெருமையுடன் நினைவுகூர்வோம்.

நாம் 66 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இவ்வேளையில், எமது நாடு பல்வேறு அழுத்தங்களை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளது. இந்த நிலைமையைத் தொடர விடாமல் எமது பிரச்சினைகளை நாங்களே தீர்த்துக்கொள்ளும் ஒர் ஆரோக்கியமான ஜனநாயக பொறிமுறை உருவாக்கப்படல் வேண்டும். 

இலங்கையில் வாழும் சகல இன மக்களும், “இலங்கை எமது நாடு. இந்நாட்டின் சுதந்திரத்தைக் கேள்விக்குறியாக்கும் எந்த ஒரு வெளித் தலையீட்டையும் அனுமதிக்கமாட்டோம்” என்று கூறும் நிலை வரவேண்டும். அப்போதுதான் நாம் பெற்ற சுதந்திரம் நிறைவுபெறும்.

66வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மகிழ்ச்சிகரமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.


உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
தலைவர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :