அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயத்தில் கல்விக்கான சத்துணவு வழங்கும் திட்டம்
எம்.ஐ.றியாஸ்,எம்.ஐ.பிர்னாஸ்,பைசல் இஸ்மாயில்,ஏ.எல்.றமீஸ்-

ஹிந்தச் சிந்தனை வேலைத்திட்டத்தின் மூலம் அட்டாளைச்சேனை அந்-நுார் மகா வித்தியாலய தரம் ஒன்று முதல் ஐந்து வரையான மாணவர்களுக்கு கல்விக்கான உணவு வழங்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று அதிபர் ஏ.எம்.எம்.இத்ரீஸ் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர்,அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.அன்சில்,பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல்.எம்.முனாஸ்,ஆசிரிய ஆலோசகர் யூ.எம்.நியாஸி ,பிரதி அதிபர் எம்.ஏ.அப்தல்ஹை,உதவிஅதிபர் எம்.ஐ.ஹாசீம்,உட்பட பாடசாலை சமூகத்தினர் மற்றும் ஆசிரியர்களால் பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கி வைக்கப்பட்டன.

இப்பாடசாலையின் பல்வேறு குறைகளை அதிபர் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நஸீரிடம் முன்வைத்த போது முடிந்த வரை குறைகளை நிவர்த்தி செய்து தருவதாக இதன்போது தெரிவித்தார்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :