ஆந்திரா பிரிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடுரோட்டில் சமையல் செய்து போராட்டம் நடத்திய ரோஜா

ந்திரா பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ரோஜா நடுரோட்டில் சமையல் செய்து போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்கும் மசோதாவுக்கு மத்திய மந்திரிகள் குழு ஒப்புதல் அளித்து உள்ளது.

இந்த மசோதா ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது. அவர் அதனை ஆந்திர சட்ட சபை ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளர். இந்த மசோதாவுக்கு ஆந்திர சட்டசபை ஒப்புதல் வழங்க 6 வாரம் அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி உள்பட சீமாந்திரா பகுதி எம்.பி.க்கள் வியாழன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சீமாந்திரா பகுதியில் உள்ள 13 மாவட்டங்களிலும் இந்த மறியல் போராட்டம் நடைபெற்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

ஆந்திரா, தமிழகம், கர்நாடகம் எல்லையில் பல கிலோ மீற்றர் தூரத்துக்கு வாகனங்கள் வரிசையாக நின்றன. திருப்பதி-சென்னை நெடுஞ்சாலையில் புத்தூர் அருகே ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் நடிகை ரோஜா தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது.

மேலும் அவர் நடுரோட்டில் சமையல் செய்து போராட்டத்திலும் ஈடுபட்டார். இதனால் சென்னை- திருப்பதி இடையே பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :