ஐ. ஏ. காதிர் கான்-
அண்மையில் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன், தமது வட பகுதியின் பயணத்தைத் தொடர்ந்து தெரிவித்த கருத்துக்களுக்கு எதிராக, மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று, கொழும்பில் இன்று இடம் பெற்றது. கொழும்பு தெவட்டகஹ ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு அருகில், இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையின் பின்பு, இந்த ஆர்ப்பாட்டப் பேரணி இடம் பெற்றது.
இலங்கையின் ஐக்கியத்திற்கும் ஒருமைப்பாட்டிற்கும் ஆதரவளிக்கும் தமிழ் முஸ்லிம் சிங்கள சமூகங்களின் பிரதி நிதிகளைக் கொண்ட தேசபிமாணக் கூட்டமைப்பு இந்த ஆர்ப்பாட்டப் பேரணியை ஒழுங்கு செய்திருந்தது.
“முஸ்லிம்களை கமரூன் மறந்தது ஏன்…?, வடக்கில் உள்ள முஸ்லிம் பிரதேசங்களுக்கு கெமரூன் செல்லாதது ஏன்…? , அயர்லாந்துக்கு ஒரு நீதி- இலங்கை;கு ஒரு நீதியா…? , பிரித்தானியப் பிரதமர் ஒருதலைப் பட்சமாக நடந்து கொள்வது சரியா…? , புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம்களை கெமரூன் சந்திக்காதது ஏன்…? ” ஆகிய, வசனங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்திய வாறு, இதில் கலந்து கொண்டோர் கோஷங்களை எழுப்பினர்.
சுமார் ஒரு மணி நேரம் வரையில் இடம் பெற்ற இந்த மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியில், அமைப்பின் உறுப்பினர்கள், நாட்டைப் பாதுகாக்கும் அமைப்பின்; செயற்பாட்டாளர்கள், சகல இனங்களைச் சேர்ந்த மத குருமார்கள் மற்றும் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment