இரண்டு வயது குழந்தை நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ள அதிர்ச்சி சம்பவம்

ரண்டு வயது குழந்தை ஒன்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ள அதிர்ச்சி சம்பவம் ஒன்று சீனாவில் நடந்துள்ளது., மருத்துவர்கள் மிகுந்த போராட்டத்திற்கு பின், அறுவை சிகிச்சை செய்து அந்த குழந்தையை காப்பாற்றியுள்ளனர்.

சீனாவை சேர்ந்த Xiao Feng என்ற இரண்டு வயது குழந்தைக்கு பிறந்தது முதலே வயிறு சற்று பெரிதாக இருந்துள்ளது. ஆரம்பத்தில் இதை கவனிக்காமல் விட்ட, நாளடைவில் தங்கள் குழந்தையின் வயிறு பெரிதாவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து மருத்துவர்களிடம் காண்பித்துள்ளனர். மருத்துவமனையில் சோதனை செய்து பார்த்தபோது குழந்தையின் வயிற்றில் ஒரு குழந்தை இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த தகவலை அறிந்து பெற்றோர் கடும் அதிர்ச்சியடைந்தனர். இந்த குழந்தை பிறக்கும்போதெ இரட்டைக்குழந்தையாக உருவாகியுள்ளது என்றும், ஒரு குழந்தையின் கரு சில காரணங்களால் மற்றொரு குழந்தையின் வயிற்றில் தாயின் கருவில் இருக்கும்போதே சென்றுவிட்டது என்றும், அது தற்போதுதான் தெரியவந்துள்ளது என்றும் மருத்துவர்கள் விளக்கம் அளித்தனர்.

பின்னர் அறுவை சிகிச்சை மூலம் வயிற்றில் உள்ள குழந்தையை வெளியே எடுத்தனர். வெளியே வந்த அந்த குழந்தை உயிருடன் இல்லை. மேலும் அது ஒரு தசைக்கட்டியாக, குழந்தை போன்றே இல்லாமல் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அறுவை சிகிச்சைக்குப் பின் Xiao Feng என்ற இரண்டு வயது குழந்தை தற்போது நலமாக உள்ளார்.

தாயின் கருவில் இருக்கும்போது இதுபோன்று ஒரு குழந்தையின் வயிற்றுக்குள் மற்றொரு குழந்தையின் கரு செல்வது மிகவும் அரிதான செயல் என்றும், இதுபோன்று ஒரு நிகழ்வு கடந்த 2010ஆம் ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு குழந்தைக்கு ஏற்பட்டுள்ளது என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :