இலங்கையில் உள்ள கெசினோ மத்திய நிலையங்களை மூடுமாறு வலியுறுத்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொள்ளுபிட்டி மஹானாம கல்லூரி மற்றும் வாலுக்காராம விகாரைக்கு அருகில் உள்ள கெசினோ நிலையத்திற்கு முன்னால் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று பகல் 1 மணிக்கு இடம்பெறவுள்ளது. இதனை 'கெசினோ தேசிய எதிர்ப்பு' என்ற அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
கொள்ளுபிட்டி மஹானாம கல்லூரி மற்றும் வாலுக்காராம விகாரைக்கு முன்னால் உள்ள கெசினோ நிலையத்தை மூடுமாறு இங்கு வலியுறுத்தப்படவுள்ளது. அத்துடன் குறித்த கெசினோ நிலையத்தின் உரிமையாளரான அமைச்சு ஒன்றின் செயலாளரை பதவி நீக்கம் செய்யுமாறும் கோரப்படவுள்ளது.
இலங்கையில் தற்போது இயங்கி வரும் அனைத்து கெசினோ மற்றும் சூது, பந்தய நிலையங்களை மூட வேண்டும் என 'கெசினோ தேசிய எதிர்ப்பு' அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையில் தற்போது இயங்கி வரும் அனைத்து கெசினோ மற்றும் சூது, பந்தய நிலையங்களை மூட வேண்டும் என 'கெசினோ தேசிய எதிர்ப்பு' அமைப்பு தெரிவித்துள்ளது.

0 comments :
Post a Comment