கவலைக்கிடமான நிலையில் நகைச்சுவை நடிகர் சிட்டிபாபு

பிரபல நகைச்சுவை நடிகர் சிட்டிபாபு கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சுய நினைவிழந்து கோமாவில் உள்ள அவரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.

தூள், சிவகாசி, திண்டுக்கல் சாரதி, திருவண்ணாமலை, மாப்பிள்ளை உள்பட பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர் சிட்டிபாபு.

இவர் ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு இருதய கோளாறு காரணமாக, ´பைபாஸ் சர்ஜரி´ செய்து கொண்டார். அதன்பிறகு 2 வருடங்களாக அவர் நடிக்காமல் ஓய்வில் இருந்தார். சமீபகாலமாக அவர் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆனாலும் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை.

நேற்று முன்தினம் அவர் திடீரென மயங்கி விழுந்தார். கவலைக்கிடமான நிலையில்,அவரை சென்னை முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவமனையில் அவருடைய நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது.

சுய நினைவை இழந்து, ´கோமா´ நிலையில் உள்ளார் சிட்டிபாபு. மூளையில் கட்டி இருப்பதாகவும், அதற்காக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :