நீர்ப்பாசன அமைச்சின் கீழ் உள்ள திணைக்களத்தின் ஊழியர்கள் கௌரவிக்கப்படுவர்- உதுமாலெப்பை





-சலீம் ரமீஸ்-
தியாக மனப்பாங்குடன் பணியாற்றி வருகின்ற அரச உயரதிகாரிகள், அதிகாரிகள், ஊழியர்கள் கௌரவிக்கப்பட வேண்டும். இதற்கமைவாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி ,நீர்ப்பாசன அமைச்சின் கீழ் உள்ள அனைத்து திணைக்களங்களின் ஊழியர்களும் அவர்களுடைய சேவையை பாராட்டி கௌரவிக்கப்படவுள்ளனர் என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி ,நீர்ப்பாசனம் ,வீடமைப்பபும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி ,நீர்ப்பாசனம் ,வீடமைப்பபும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சினால் சமர்ப்பிக்கப்படவுள்ள 2014ஆம் ஆண்டுக்கான வரவு,செலவு திட்டம் தொடர்பான கூட்டம் கல்முனை பிரதி நீர்;ப்பாசனப் பணிப்பாளர் அலுவலகத்தில் இடம் பெற்ற போது இதற்கு தலைமை தாங்கிய அமைச்சர் உதுமாலெப்பை மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அமைச்சர் அங்கு உரையாற்றுகையில் ,கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி ,நீர்ப்பாசன அமைச்சு மூலமாக கிழக்கு மாகாணத்தில் மூவினங்களும் நீதியான முறையில் சேவை செய்து வருகின்றோம். இச் சேவைக்கு அமைச்சினதும், திணைக்களங்களிலும் பணியாற்றுகின்ற செயலாளர்கள், பணிப்பாளர்கள், பொறியியலாளர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் ,திட்டமிடல் உத்தியோகத்தர்கள் ,ஊழியர்களின் பங்களிப்புகள் மிகவும் முக்கியத்துவம் வகிக்கின்றது.

இவ்வாறு மக்களுக்கான சேவைக்கு நேரம், காலம் பாராமல் பணியாற்றி வரும் அரச அதிகாரிகள் மதிக்கப்பட வேண்டும். விஷேடமாக அவர்கள் உயிருடன் வாழ்கின்ற காலத்தில் அவர்களை நாம் பாராட்டி கௌரவிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுடைய சேவையில் ஒரு சந்தோசமும்,கௌரவமும், திருப்தியும் ஏற்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதே நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்ஸார், உதவிச் செயலாளர்களான எம்.ஐ.சலாஹூத்தீன், எம்.ஐ.பிர்னாஸ், மாகாணப்பணிப்பாளர்களான எஸ்.திலகராஜா, வீ.கருனைநாதன், எஸ்.வேல்மாணிக்கம், பிரதி நீர்ப்பாசன பணிப்பாளரான யு.எல்.எ.நஸார், உட்பட பிரதம பொறியியலாளர்கள், பொறியியலாளர்கள் அமைச்சினதும் ,திணைக்களங்களினதும் உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :