-எஸ்.அஷ்ரப்கான்-
பாடசாலை நிர்வாகம் சுயாதீனமாக இயங்க வேண்டும் பாடசாலை அதிபரின் அனுமதியின்றி பாடசாலை வளாகத்திலுள் எவரும்நுளைய முடியாத அளவுக்கு நிர்வாகம் சீர்செய்யப்பட வேண்டும் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,கல்முனை அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் பிரதி அதிபர் பிரதிக்கல்விப்பணிப்பாளர் ஒருவரினால் தாக்கப்பட்டதினால் ஏற்பட்டஅசாதாரண நிலையினை ஆராயும் உயர்மட்ட கூட்டம் பாடசாலை பதில் அதிபர் எம்.எஸ்.எம். ஹம்சா தலைமையில் அதிபர் காரியாலயத்தில் இடம்பெற்றது. இதில் பாடசாலை பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்படி தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்,
இப்பாடசாலையின் பிரதி அதிபர் தாக்கப்பட்டதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அவர் உடல் தேகாரோக்கியம் பெறபிரார்த்திக்கின்றேன். அவரது குடும்பத்தாருக்கு எனது அனுதாபத்தைச் தெரிவித்துக் கொள்கின்றேன். இனிமேல் இவ்வாறானஅநாகரீக செயற்பாடுகள் பாடசாலைகளில் இடம்பெற அனுமதியேன்.
இப்பாடசாலையில் ஏற்பட்ட அசாதாரண நிலைமையினை எனது பணிப்புரைக்கமைவாக செயற்பட்டு கட்டுகப்பாட்டுக்குள்கொண்டுவந்து கற்றல்,கற்பித்தல் நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு உதவிய கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர்யூ.எல்.எம்.ஹாசீம் மற்றும் அவருடன் உறுதுணையாக நின்று செயற்பட்ட கல்முனைக்குடி, சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல்நம்பிக்கையாளர் சபையினர், பாடசாலை பதில் அதிபர்,பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள்,பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
ஸாஹிராக் கல்லூரியின் கற்றல், மற்றும் நிர்வாக செயற்பாடுகளை நான் வெளியில் நின்று மிக உன்னிப்பாக அவதானித்துவருகின்றேன். இதனால் பாடசாலை அதிபர் நியமனத்தின் போது இங்குள்ள ஆசிரியர்களின் விரும்பத்துடன் ஆதம்பாவாஅவர்களை அதிபராக நியமிக்க சிபாரிசு செய்தேன்.
பாடசாலையின் தற்போதைய நிர்வாகக் கட்டமைப்பு முற்றாக மாற்றப்பட வேண்டும். ஏனெனில் கொழும்பு போன்ற நகர்ப்புறபாடசாலைகளின் அதிபர்கள் தனது நிர்வாக அதிகாரத்தினை முழுமையாக பயன்படுத்துவதை காண்கிறோம். தரம் ஒன்றுக்குஇப்பாடசாலைகளில் மாணவர் ஒருவரை சேர்ப்பதற்கு அமைச்சரினது சிபாரிசு தேவைப்படுகின்றது. சில சமயம் இச்சிபாரிசினைகூட அப்பாடசாலைகளின் அதிபர்கள் நிராகாரிக்கின்றனர். அந்தளவுக்கு அவர்கள் நிர்வாகத்தினை செயற்படுத்துகின்றனர்.
அதனோடு ஒத்ததாக எமது பிராந்தியத்தில் பல தேசிய பாடசாலைகள் உள்ளன. அதன் நிர்வாகக் கட்டமைப்பு முற்றிலும் இதற்குமாற்றமாக காணப்படுகின்றது. பாடசாலை அதிபரின் அனுமதியின்றி பாடசாலை வளாகத்திலுல் எவரும் நுளைய முடியாதஅளவுக்கு நிர்வாகம் சீர்செய்யப்பட வேண்டும்.
பாடசாலைகளின் நிர்வாக செயற்பாடுகள் அரசியல், உயர் அதிகாரிகளின் தலையீடின்றி சுயாதீனமாக இயங்கவேண்டும்.இதனையே நான் விரும்புகின்றேன். பாடசாலையின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் சரியாக நடைபெறுகின்றதா ? என்பதற்குபரீட்சை முடிவுகள்தான் சான்றாகும். அதனடிப்படையில் கடந்த கால பரீட்சை முடிவுகளின்படி என்னால் அதனை உணரமுடிகின்றது.
நான் கல்முனை தொகுதி அபிவிருத்திக் குழுவின் தலைவர் என்ற வகையில் பாடசாலையின் பௌதீக, உட்கட்டமைப்புஅபிவிருத்தியில் எனக்கு பங்குண்டு. அதனடிப்படையில் அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. இச்சந்தர்ப்பத்தில்எமது பிரதேச அபிவிருத்திற்கு நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கவிருக்கின்றன. இதன் மூலம் பாடசாலைக்கு தேவையான அபிவிருத்திவேலைத்திட்டங்களை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.
இதன்போது பிரதி அதிபர் தாக்குதலோடு தொடர்புடைய பிரதிக் கல்விப்பணிப்பாளருக்கும் அவரது சகோரருக்கும் எதிராகநடவடிக்கை எடுக்க கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழாமினால் நிறைவேற்றப்பட்ட ஏழுஅம்சக்கோரிக்கையினை பாராளுமன்ற உறுப்பினரிடம் பாடசாலையின் பதில் அதிபர் கையளித்து வைத்தார்.(

0 comments :
Post a Comment