வேறு ஒரு நாடு குறித்து இன்னும் ஒரு நாட்டிற்கு தீர்மானிக்க முடியாது- பீரிஸ்


பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டு தொடர்பில் ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்று இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்த கருத்து -

‘கொழும்பில் நடைபெறுகின்ற இந்த மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு பொதுநலவாய நாடுகளில் அங்குவத்தும் வகிக்கும் அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுத்தோம்.

அதை ஏற்றுக்கொள்வதா இல்லையா எனபதை அவர்கள் தீர்மானிக்க வேண்டும். இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் நாடுகள் குறித்து நாம் திருப்தியடைகிறோம் மகிழ்ச்சியடைகிறோம்.

பொதுநலவாய நாடுகளுக்குள் வேறு ஒரு நாடு குறித்து இன்னும் ஒரு நாட்டிற்கு தீர்மானிக்க முடியாது. சில நாடுகள் சில தீர்மானங்களை வழங்க முடியாது. அது பொதுநலவாய நாடுகளின் தன்மைக்கு முற்றிலும் மாறுபட்டது. இது பொதுநலவாய நாடுகள் குறித்த எமது கருத்து’

பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளாமைக்கான காரணத்தை இந்தியப் பிரதமர் தெரியப்படுத்தியுள்ளாரா என்று இதன் போது வினவப்பட்டது.

‘அவருக்கு இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கான சந்தர்ப்பம் இல்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார். அதற்கு அவர் என்ன காரணத்தை முன்வைத்துள்ளார் என்று நங்கள் கேட்கின்றீர்கள். அவர் காரணங்களை முன்வைக்கவில்லை.

அவர் தரப்பினருக்கு இந்த மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு இலங்கை அரசாங்கம் அழைப்பு விடுத்தது.நாமும் சிலவற்றில் கலந்துகொள்வோம் சிலவற்றில் கலந்துகொள்ள மாட்டோம்

அவ்வாறு கலந்துகொள்ளாதிருப்பதற்கான காரணத்தை இலங்கை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற தேவை இல்லை.

அடுத்ததாக சில நாடுகள் புறக்கணித்தமையால் இந்த மாநாட்டின் மொத்த முடிவுகளில் பாதிப்பு செலுத்துமா என்று நீங்கள் கேட்கின்றீர்கள். எந்த விதத்திலும் அவ்வாறு இடம்பெற மாட்டாது.

இது வழமையாக இடம்பெறும் ஒருவிடயம். பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு நடைபெறும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சில நாடு மாநாட்டில் கலந்துகொள்ளாதிருக்கின்றது.

அதிகமான மாநாடுகள் இந்த மாநாட்டில் கலந்துகொள்கின்ற போது கலந்துகொள்ளாதிருக்கின்ற நாடுகள் குறித்து நாம் ஏன் கதைக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

அனைத்து நாடுகளுக்கும் சம உரிமையுண்டு
பொதுநலவாய அமைப்பில் இடம்பெற்றுள்ள அனைத்து நாடுகளுக்கும் சரிசமமான உரிமை உள்ளதென பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு அதிகளவான உரிமை என்ற பாகுபாடு கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :