ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலமைத்துவத்தின் வேண்டுகோளுக்கிணங்க இறக்காம பிரதேச சபையினுடைய தவிசாளராக இருந்த நைஷர் இன்னாள் தவிசாளர் ஜபீருக்கு தவிசாளர் பதவியை விட்டுக்கொடுத்தமையை நேரில் சென்று நன்றி கூறிப் பாராட்டினார் அக்கரைப்பற்று மாநகரசபையின் எதிர்கட்சித் தலைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஊடகப்பணிப்பாளருமான அஷ் ஷெஹ் எஸ்.எல்.ஏ.ஹனீபா மதனி அவர்கள்.
இன்னிகழ்வு நேற்று மாலை (11.11.2013) இடம்பெற்றது அதேபோன்று கல்முனை மாநகர சபை முன்னாள் முதல்வர் டாக்டர் சிராஸ் மீராசாஹிப் அவர்களுக்கும் நன்றி கூறி இன்னாள் முதல்வர் நிசாம் காரியப்பர் அவர்களுக்கும் வாழ்த்துக்கூறினார் ஹனீபா மதனி அவர்கள்.
இச்சந்திப்பில் அட்டாளைச்சேனைப் பிரதேசசபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அக்கரைப்பற்று மத்திய குழு உப தலைவர் ஏ.எல்.மர்ஜூன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.




0 comments :
Post a Comment