அமெரிக்காவின் சிகாகோ சர்வதேச விமான நிலையத்தில் எதிர்பாராத பார்வையாளராக வந்திருந்த 2 அடி நீள முதலை பிடிபட்டது.
சிகாகோ பகுதி ஓ ஹேர் விமான நிலையத்தின் 3-வது முனையத்தில், நகரும் படிக்கட்டின் அடிப்பகுதியில் இந்த முதலையை, அப்பகுதி பராமரிப்புக்குச் சென்ற ஊழியர் கண்டுபிடித்தார்.
இதைத்தொடர்ந்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார். பொலிஸார் விரைந்து வந்து முதலையைப் பிடித்து பெட்டிக்குள் அடைத்தனர்.
பின்னர், அந்த முதலை சிகாகோ முதலைப்பண்ணைக்குக் கொண்டு சென்று விடப்பட்டது.
இதுகுறித்து பொலிஸார் கூறுகையில்,
"பிடிபட்ட முதலை 2 அடி நீளம் இருந்தது. அதற்கு 3 வயது இருக்கலாம். யாரோ சில மர்ம நபர்கள் முதலையை விமான நிலையத்துக்கு எடுத்து வந்து, இந்தப்பகுதியில் விட்டுச் சென்றுள்ளனர்'' என்றனர்.

0 comments :
Post a Comment