தரவரிசைப் பட்டியலில் 20இடங்களுக்குள் முன்னேற சச்சினுக்கு வாய்ப்பு

னது கடைசி டெஸ்ட் தொடரை விளையாட உள்ள சச்சின்,தரவரிசைப் பட்டியலில் 20இடங்களுக்குள் முன்னேற வாய்ப்புள்ளது.


டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசைப் பட்டியலின் முதலிடத்தை முதன் முதலாக 1994-ம் ஆண்டு பிடித்தார். அப்போது, முதலிடத்தில் இருந்த பிரையன் லாராவை சச்சின் பின்னுக்குத் தள்ளினார். 

தற்போது, சச்சின் 632 புள்ளிகளுடன்24-ம் இடத்தில் உள்ளார். 22-ம் இடத்தில் 634புள்ளிகளுடன் விராட் கோலியும், பிராவோவும் உள்ளனர். 20-ம் இடத்தில் 637 புள்ளிகளுடன் தோனியும், கெய்லும் உள்ளனர். எனவே, மேலும் 7 புள்ளிகளை சச்சின் பெறும் பட்சத்தில் மீண்டும் 20-வது இடத்துக்கு அவர் முன்னேறுவார்.

சச்சின், தனது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 5 முறை (1994-நவம்பர், 1998-மார்ச், 2000-மே, 2002-ஜனவரி, அக்டோர்-2010) முதலிடத்தில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :