கல்முனை மாநகரசபையில் கடந்த இரு வருடங்களாக போலியாக சம்பளம் பெற்ற இருவர் கண்டுபிடிப்பு என்ற அடிப்படையில் அடையாளம் தெரியாத நபர்களினால் அனோமோதயமாக இணையத்தளங்களில் வெளியிடப்பட்ட செய்தி உண்மைக்குப் புறம்பானதும், கணக்காய்வு நியமங்களுக்கு பங்கம் ஏற்படுத்துவதுமாகும்.
தற்போது மாநகரசபையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசியல் இழுபறிகளுக்கு அப்பால் நடுநிலையாகவும், சட்டத்தின் அடிப்படையிலும் செயற்பட்டுக் கொண்டிருக்கும் அதிகாரிகளையும், ஊழியர்களையும் இத்தகைய போலியான செய்திகளை வெளியிடுவதன்மூலம் தமது அரசியல் காய்நகர்த்தல்களுக்குள் பகடைக்காய்களாக்க முற்படுவது அநாகரிகமானதும், வருந்தத்தக்கதுமான ஒரு செயலாகும்.
இத்தகைய செய்திகள் மாநகரசபை அதிகாரிகள், ஊழியர்களை தொடர்ந்தும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கி மக்களுக்கான அன்றாட சேவைகளை தங்கு தடையின்றி வழங்கும் செயற்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் எனும் நோக்கில் திட்டமிட்டு ஒரு சிலரால் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவர்களின் இச்செயற்பாடு மல்லாக்கப்படுத்துக் கொண்டு காறி உமிழ்வதற்கு ஒப்பானதாகும்.
எதிர்காலத்தில் இச்செய்திகளை வெளியிடுவோர் தாங்கள் யார் என்பதை மக்களுக்கு தெரிவிப்பதோடு, ஊடகங்களும் இவர்களை அடையாளப்படுத்தி ஊடக தர்மத்தின் அடிப்படையில் செய்திகளை வெளியிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
இவ்வண்ணம்,
கல்முனை மாநகரசபை ஆணையாளர்,
அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள்.

0 comments :
Post a Comment