ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட சிவில் அமைப்புக்கள் கொழும்பில் சத்தியாக்கிரக போராட்டம்

க்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட சிவில் அமைப்புக்கள் இணைந்து இன்று மாலை 3 மணி அளவில் கொழும்பு - கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர்.


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர். வரவு - செலவுத் திட்டத்தில் மக்களுக்கு நிவாரணம் வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த சத்தியாக்கிரக போராட்டம் மேற்கொள்ளப்படும் என ஐதேக பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். 

இதேவேளை, கட்சித் தலைவருக்கு உள்ள அனைத்து அதிகாரங்களும் தலைமைத்துவ சபைக்கு வழங்கப்பட்டுள்ளதென ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார். மல்வத்து மாகாநாயக்க தேரரை நேற்று சந்தித்து ஆசி பெற்ற பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :