ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சனல்-4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்களை தேநீர் அருந்த வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு நடத்தப்படவுள்ள வர்த்தக பேரவையை ஆரம்பித்து வைத்த பின்னர், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச காரில் ஏறிச் செல்ல தயாரானபோதே இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் மத்தியில் காணப்பட்ட ஜனாதிபதியை நோக்கி சனல்-4 ஊடகவியலாளர்கள் உரத்த குரலில் கேள்விகள் கேட்டனர்.
சில கேள்விகளுக்கு பதில்கூறிய ஜனாதிபதி, அவர்களை தேநீர் அருந்தவருமாறு சிரித்தவாறே கூறியுள்ளார்.
இவ்வேளையில், சனல்-4 ஊடகவியலாளரான ஜொனதன் மில்லர் தன்னை அறிமுகப்படுத்தியபோது, ஜனாதிபதி, மில்லரை நோக்கிவந்து கைகளை குலுக்கி, நாம் மீண்டும் சந்திப்போம் எனக் கூறியுள்ளார்.
தாம் ஜனாதிபதியை சந்திக்க முடியுமா என ஜொனதன் மில்லர் கேட்டபோது அவர் ஆம் என கூறியதுடன், அதற்கென்ன, நாம் தேநீர் விருந்தில் சந்திப்போம் எனக் கூறினார்.

0 comments :
Post a Comment