வட மாகாண சபை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்றமை பாராட்டத்தக்க விடயமாகும். இதன் மூலம் நாட்டின் சட்டத்தையும் அரசியலமைப்பையும் கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.
எனவே கூட்டமைப்பின் இந்த சமிக்ஞையை புரிந்துகொண்டு மக்களின் ஆணைக்கு ஏற்ப செயற்பட அரசாங்கம் முன்வரவேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
குறிப்பாக விக்னேஸ்வரனின் வெற்றியையும் கூட்டமைப்பின் வெற்றியையும் அரசாங்கம் தடுக்க முயற்சித்தது. எனினும் தற்போது நிலைமை மாறியுள்ளது.
இதனை நாங்கள் பாராட்டுகின்றோம். மேலும் வட மாகாணத்துக்கு எதனையும் வழங்க முடியாது என்று ஆளும் தரப்புக்குள்ளிருந்து கூறுபவர்களுக்கு சிறந்த பதில் அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

0 comments :
Post a Comment