தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் தங்கியிருந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தொழிற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்து உள்ள காரமடை அருகே இருக்கும் குட்டையூரில் நேயம் ஊனமுற்றோர் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இங்கு மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூளை வளர்ச்சி குன்றியவர்கள் படித்து வருகின்றனர். இது தவிர இது காப்பகமாகவும் உள்ளது.
இந்த காப்பகத்தில் பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் வணங்காமுடி(57) என்பவர் இந்த பள்ளியின் தொழிற்கல்வி ஆசிரியராக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார்.
அவர் கடந்த 1 வாரத்திற்கு முன்பு அங்கு தங்கியிருந்த வாய் பேச முடியாத 20 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்
இதுகுறித்து அறிந்த நிர்வாகம் சம்பவத்தை மறைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
பின்பு கோவையில் இருந்து சேவா சங்கம் மூலம் தான் இந்த பள்ளிக்கு மளிகை பொருட்கள் வழங்கப்படும். அவ்வாறு மளிகை பொருட்கள் கொண்டு வந்தவர்களிடம் அப்பெண் சைகையால் தனக்கு நேர்ந்த கொடுமையை தெரிவித்துள்ளார்.
உடனே அவர்கள் இது குறித்து கோவை மக்கள் நல சேவா சங்கத் தலைவர் குருமூர்த்தியிடம் தெரிவித்துள்ளனர்.
பின்பு அவர் இந்த சம்பவம் பற்றி காரமடை பொலிசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து வணங்காமுடியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

0 comments :
Post a Comment