பிரான்சில் ஆசிரியை ஒருவர் தன்னிடம் படிக்கும் 14 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் ஆங்கில ஆசிரியையாக தனியார் பள்ளி ஒன்றில் பணிபுரிபவர் சிசிலி(34). இவர் தன்னிடம் படிக்கும் 14 வயது சிறுமிக்கு செக்ஸ் சம்பந்தமான உணர்வுகளை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் அவரிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பொலிசில் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
பின்பு நடைபெற்ற விசாரணையில் இவர் இதற்கு முன்னதாக பாலியல் குற்றங்களுக்கு ஆளானதால் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகின.
மேலும் இவரது பழக்கவழக்கங்கள், இமெயில் மற்றும் குறுஞ்செய்திகள் போன்றவை ரொமான்டிக் விதத்திலேயே இருந்ததாக சமீபத்தில் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இவரை 18 மாதங்கள் பணிநீக்கம் செய்ததுடன் 700 யூரோ அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

0 comments :
Post a Comment