பிரித்தானியாவில் இவ்வாரம் நடைபெற்ற மதிப்புமிக்க தேசிய குதிரை ஓட்டப் போட்டியில் ஹரி எட்வட் பிரடி என்ற மூன்று வயது சிறுவன் ஒருவன் பங்குபற்றி சாதனை நிலைநாட்டியுள்ளான்.
பிரித்தானியாவில் ஆயிரக் கணக்கான பார்வையாளர்கள் மத்தியில் இவன் தன்னுடைய திறமையை காட்டி வெற்றியை தனதாக்கிக் கொண்டான்.
எல்லா சிறுவர்களைப்போல இவனும் விளையாட்டு பிள்ளைதான்.
இது குறித்து இவன் கூறுகையில், ஏனைய சிறுவர்களை போல நானும் விளையாடுவேன், அத்தோடு அவர்களை போலவே எனக்கு பிடித்த உணவுகளை சாப்பிடுவேன் என்று கூறியுள்ளான்.
இவ்வருடம் குதிரை ஓட்டப் பயிற்சிகளை ஆரம்பித்த ஹரி, ஏற்கெனவே உள்ளூர் போட்டிகளில் பங்கு பற்றி 4 பட்டங்களை வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.-

0 comments :
Post a Comment