தலைவா படம் ரிலீஸ் தேதி பற்றி முடிவு செய்ய தியேட்டர் அதிபர்கள் சென்னையில் இன்று அவசர கூட்டம் நடத்தினார்கள். சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு முழுவதிலும் இருந்து தியேட்டர் உரிமையாளர்கள் இதில் பங்கேற்றனர். காலை 11 மணிக்கு தேனாம்பேட்டையில் உள்ள சங்க அலுவலகத்தில் இக்கூட்டம் துவங்கியது.
கூட்டத்தில் பேசியவர்கள் எம்.ஜி முறைக்கு பதில் சதவீத அடிப்படையில் படத்தை திரையிடலாம் என்றனர். சுதந்திர தினத்தையொட்டி வருகிற 15 அல்லது 16–ந் திகதி படத்தை திரையிடுவது குறித்தும் ஆலோசித்தனர். இன்று மாலை முடிவு அறிவிக்கப்படும் என தெரிகிறது.
இதற்கிடையில் ‘தலைவா’ படத்தின் திருட்டு சி.டி.க்கள் பல்வேறு மாவட்டங்களில் பரவி வருகிறது. இன்டர்நெட்டிலும் இப்படம் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ‘தலைவா’ படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். விரைவில் படத்தை ரிலீஸ் செய்ய தீவிர முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.
கேரள, கர்நாடகம், ஆந்திராவில் படம் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கேரளாவில் 131 தியேட்டர்களில் திரையிடப்பட்டு உள்ளது. முதல் நாள் வசூல் ரூ.1.12 கோடியை தாண்டியது. முதல் வாரத்தில் ரூ.3 கோடி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திராவில் ‘தலைவா’ படம் ’அண்ணா’ என்ற பெயரில் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டு உள்ளன. 275 தியேட்டர்களில் இப்படம் வெளியாகியுள்ளது. முதல் நாள் ரூ.1 கோடி வசூலித்துள்ளது. அமெரிக்காவில் வார இறுதியில் ரூ.1.29 கோடி வரை வசூலித்துள்ளது

0 comments :
Post a Comment