இந்தியா - பாகிஸ்தான், காஷ்மீர் பிரச்சினையில் சமரசம் செய்ய ஐநா தயார்

ந்தியாவும், பாகிஸ்தானும் விரும்பினால் காஷ்மீர் பிரச்சினையில் சமரசம் செய்ய ஐ.நா. தயாராக உள்ளது என பொதுச் செயலாளர் பான் கி மூன் தெரிவித்தார். 

ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் 2 நாள் பயணமாக பாகிஸ்தான் செல்கிறார். அதற்கு முன்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

காஷ்மீர் எல்லையில் நடந்த சம்பவங்களால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதை அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். இதனால் எல்லையில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.

இந்த நேரத்தில் பிரச்சினைகளை தீர்க்க இருநாடுகளும் பேச்சு வார்த்தை நடத்த முயற்சி மேற்கொண்டுள்ளது. இது வரவேற்கதக்கது. நம்பிக்கையூட்டும் செயலாகவும் உள்ளது.

நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் காஷ்மீர் பிரச்சினை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிகழ்ச்சி நிரலில் உள்ளது. இந்த நிலையில் இந்தியாவும், பாகிஸ்தானும் விரும்பினால் மட்டுமே சமரச நடவடிக்கையில் ஐ.நா.சபை ஈடுபடும்.

அதுவரை இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்க்க முயற்சிக்க வேண்டும். எல்லையில் தற்போது பதட்டம் சூழ்ந்துள்ள நிலையில் போரை தவிர்க்க ஐ.நா. பாதுகாப்பு கண்காணிப்பாளர்கள் முடிந்த வரை தீவிரமாக முயன்று வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :