(எஸ்.அஷ்ரப்கான்)
புனித றமழான் மாதம் பசியுடனும், தாகத்துடனும் தியாகம் செய்து நோன்பு
நோற்று புனித நோன்புப்பெருநாளைக் கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய
உள்ளங்களுக்கும் சமாதானமும் சகவாழ்வும் கிட்டி சிறப்பான எதிர்காலம்
பிறக்க வேண்டும் என வாழ்த்துகிறேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் அம்பாரை
மாவட்ட பிரச்சாரச் செயலாளர் எஸ். அப்துஸ்ஸலாம் தெரிவித்தார்.
அவர் வெளியிட்டுள்ள புனித நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில்
மேலும் குறிப்பிடும்போது,
நோன்பின் மூலம் பிறருடைய பசியையும், பட்டினியையும், அறிந்து கொண்டது
மாத்திரமல்லாமல் பிரருக்கு தானதர்மம் செய்கின்ற மனோபாவத்தையும் தெளிவாக
விளங்குகின்ற மறுமைப்பயன் நிறைந்த இந்த நோன்பின் மூலம் பெற்ற
படிப்பினைகள் மக்கள் வாழ்வில் பிரதிபலிக்க வேண்டும். அதனுாடாக எமக்கு
முன்னுள்ள சவால்களை ஈமானிய உள்ளத்தோடு மிகச் சிறப்பாக எதிர்கொள்ள
உறுதிபூனுவோமாக.
இந்த நோன்புப்பெருநாள் தினத்தில் எமது சமூகத்தினர் பிற சமூகத்தவர்களுடன்
ஒற்றுமை, சகோதரத்துவம், அமைதி, சௌபாக்கியத்துடன் சிறப்பாக வாழ முனைய
வேண்டும்.
சமூக அரசியல் சூழ்நிலைகள் சிலவேளைகளில் நமக்குப் பாதகமாக அமையக் கூடும்.
அந்தக் கட்டங்களில் உணர்வு நிலைகளை விட அறிவினைப் பிரயோகிக்கிற சமூகமாக
நாம் இருக்க வேண்டும். மிக நிதானத்தோடும், புத்தி சாதுரியத்தோடும் அந்தச்
சந்தர்ப்பங்களை நாம் வென்றெடுக்கக் கூடியவர்களாக மாற வேண்டும்.
இலங்கைத்திருநாட்டில் உள்ள பல்லின சமூகங்களும் ஒற்றுமையாக வாழ
முனையும்போது அந்நிய சக்திகளால் ஏற்படுத்தப்படும் கொடூரங்களுக்கு நாம்
அனைவரும் இலங்கையர்கள் என்ற உணர்வுடன் பதிலடி கொடுக்க எல்லா இனங்களும்
மனிதம் என்கின்ற வரையறைக்குள் நின்று செயற்பட முயற்சிக்க வேண்டும்.
எமது நாட்டில் இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் ஏவி
விடப்பட்டுள்ள சூழ்ச்சிக்கு எதிராகவும் இருகரம் ஏந்தி அல்லாஹ்விடம்
பிரார்த்திப்போமாக ! சுபீட்சமான ஒரு இலங்கையை அடைய இலங்கையர்கள் அனைவரும்
புத்திசாதுரியத்துடன் செயற்பட முன்வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.

+abdus+salam+Unp.jpg)
0 comments :
Post a Comment