திருகோணமலை வைத்தியசாலை காவலாளி சிலரின் இங்கிதமற்ற வார்த்தைப் பிரயோகம்



ன்று (11.08.2013) மதியம் திருகோணமலை வைத்தியசாலைக்கு உறவினர் ஒருவரை பார்க்க சென்ற போது நடந்த சம்பவம் -

திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் நோயாளியை அழைத்து செல்வதற்றகாக வந்திருந்த தூரப்பிரதேச முற்சக்கரவண்டி ஓட்டுனருக்கு திருகோணமலை வைத்தியசாலையின் நடைமுறை தெரியாமல் தனது முற்சக்கரவண்டியை வைத்தியசாலையின் பிரதான வாயிலின் ஊடாக குறிப்பிட்ட ஓர் இரு மீட்டர் தூரம் வளாகத்தினுள் கொண்டு சென்று விட்டார். 

இதனை அவதானித்த ஓப்பந்த அடிப்படையில் தனியார் கம்பனிகளால் நியமிக்கப்பட்டுள்ள வாயில் காவலாளி முற்சக்கரவண்டி சாரதியை மறித்து இங்கிதமற்ற முறையில் தகாத வார்தைப் பிரயோகங்களால் திட்டத் தொடங்கினர் குறிப்பிட்ட சாரதி ' அழகாக ' பேசுமாறு குறிப்பிட்ட காவலாளியை வேண்டிய போது அவர் அவர்களுடைய பேச்சு வழக்கத்தை கொச்சைப்படுத்தி பேசியதுடன் தரம் கெட்ட முறையில் நடந்து கொண்டனர்.

ஆகவே அரச வைத்தியசாலைகளுக்கு பாமரர்கள், படித்தவர்கள், ஏழைகள், செல்வந்தர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள், என பலதரப்பட்டவர்களும் வருவார்கள் அனைவரதும் மனோநிலை ஒரேமாதிரி இருப்பதில்லை கடைமைபுரியும் காவலாளிகள் பாரபட்சத்துடன் நடந்து கொள்வது என்பது பலவிதமான முறுகளை ஏற்படுத்தக் கூடும் எனவே வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக்குழு இது குறித்து மிகவிரைவில் காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்கின்றோம்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :