ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பாமைக்கு தைரியம் போதாமையே காரணமாகும் :மெனிக் டி சில்வா ஆதங்கம்

னா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுடன் பத்­தி­ரிகை ஆசி­ரி­யர்கள் மாதாந்தம் நடத்தும் காலை­நேர சந்­திப்­பின்­போது பத்­தி­ரிகை ஆசி­ரி­யர்கள் கடு­மை­யான கேள்­வி­களை ஒரு­போதும் எழுப்­பு­வ­தில்லை. நான் உட்­பட பத்­தி­ரிகை ஆசி­ரி­யர்கள் இவ்­வாறு கடு­மை­யான கேள்­வி­களை எழுப்­பு­வ­தில்லை.

எமக்கு தைரியம் போதா­மையே இதற்­கான கார­ண­மாகும் என்று கரு­து­கின்றோம் என பத்­தி­ரிகை ஆசி­ரியர் சங்­கத்தின் முன்னாள் தலை­வரும் ஞாயிறு தி ஐலண்ட் பத்­தி­ரி­கையின் ஆசி­ரி­ய­ரு­மான மெனிக் டி. சில்வா தெரி­வித்தார்.

தகவல் அறியும் உரி­மை­யா­னது நல்­லி­ணக்­கத்­துக்­கான ஒரு மார்க்­க­மாகும் என்ற தொனிப்­பொ­ருளில் இலங்கை பத்­தி­ரிகை நிறு­வ­னத்தில் நேற்று நடை­பெற்ற கலந்­து­ரை­யா­டலில் கலந்­து­கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

பத்­தி­ரி­கை­யாளர் ஊடக அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள், சிவில் சமூகப் பிர­தி­நி­திகள் மற்றும் தூத­ரக அதி­கா­ரிகள் உள்­ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்­து­கொண்­டனர். இலங்கை பத்­தி­ரிகை நிறு­வனம் அமெ­ரிக்கத் தூத­ர­கத்­துடன் இணைந்து இந்த கருத்­த­ரங்கை ஏற்­பாடு செய்­தி­ருந்­தது.

மெனிக் டி. சில்வா நிகழ்வில் மேலும் உரை­யாற்­று­கையில்,

பத்­தி­ரி­கை­யா­சி­ரி­யர்கள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவை மாதத்­துக்கு ஒரு­முறை அல்­லது ஆறு வாரங்­க­ளுக்கு ஒரு முறை சந்­திப்­பது வழக்­க­மாகும். இவ்­வா­றான சந்­திப்­புக்­க­ளின்­போது பத்­தி­ரி­கை­யா­சி­ரி­யர்கள் கடு­மை­யான கேள்­வி­களை கேட்­ப­தில்லை. இந்த கலா­சாரம் மாற­வேண்டும்.

உண்­மையில் ஏன் இவ்­வாறு பத்­தி­ரி­கை­யா­சி­ரி­யர்கள் ஜனா­தி­ப­தி­யிடம் கேள்­வி­களை கேட்­ப­தில்லை என்ற கேள்­விக்குத் தைரியம் இல்லை என்றே பதி­ல­ளிக்­க­வேண்­டி­யுள்­ளது. நான் உட்­பட பத்­தி­ரி­கை­யா­சி­ரி­யர்கள் ஜனா­தி­ப­தி­யிடம் கடு­மை­யான கேள்­வி­களை கேட்­ப­தில்லை. 

இதற்கு நாங்கள் வெட்­கப்­ப­ட­வேண்டும். நானும் அந்த சந்­திப்­புக்­களில் கலந்­து­கொள்­கின்றேன். ஆனால் எனக்­குக்­கூட அவ்­வாறு கடு­மை­யான கேள்­வி­களை கேட்கத் தோன்­று­வ­தில்லை.


அங்கு காலை உணவு வழங்­கப்­ப­டு­கின்­றது. காலை உணவு சந்­திப்பு என்றே அதனை கூறுவோம். எனினும் சந்­திப்பில் கடு­மை­யான கேள்­விகள் எழுப்­பப்­ப­டு­வ­தில்லை. குறிப்­பாக பிர­பல அமைச்சர் ஒரு­வரின் செயற்­பா­டுகள் மற்றும் அவர் அமைச்­ச­ர­வையில் தொடர்ந்து இருப்­பது குறித்து எந்­த­வொரு கேள்­வியும் நாட்­டி­னதும் அர­சாங்­கத்­தி­னதும் தலை­வ­ரான ஜனா­தி­ப­தி­யிடம் கேட்­கப்­ப­டு­வ­தில்லை.

இன்று பாரா­ளு­மன்­றத்தில் கூட எழுப்­பப்­ப­டு­கின்ற கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்க மாதக்­க­ணக்கில் கால அவ­காசம் கேட்­கப்­ப­டு­கின்­றது. சுதந்­தி­ரத்தின் பின்னர் எமது நாட்டின் பாரா­ளு­மன்­றத்தில் மிகவும் கண்ணிய­மான எம்.பி. க்கள் இருந்தனர். இன்று அந்த நிலைமை காணாமல் போய்விட்டது.

இலங்கையில் தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டமூலத்தை கொண்டுவருவதற்கு பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பிரதித் தலைவர் கரு ஜெயசூரிய இதற்கான முயற்சிகளை எடுத்தார். ஆனால் அந்த முயற்சி கைகூடவில்லை என்றார்.(vk)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -