கொழும்பைத்தான் தலைமையாக கருத வேண்டுமா? கிழக்கு மக்கள் மொக்கர்களா-மஜீட்

கிழக்கு மாகாணத்துக்கென தனியான பிறைக்குழு தேவை என நாம் கூறியதற்கு பதில் தந்த டொக்டர் ஆரிப் என்பவர் தனது கருத்துக்கு தானே முரண்பட்டு நிற்பது தெளிவாகிறது.

நான் கூறியது போல் ஏற்பாடு செய்தால் மாவட்டத்துக்கு ஒரு பிறைக்குழு இருக்க வேண்டியேற்படும் என கூறிவிட்டு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் உப பிறைக்குழு நியமிக்கலாம் என இவர் கூறியுள்ளார்.

இவ்வாறு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்வது என்பது மாகாண மட்டத்தில் அல்லது மாவட்ட மட்டத்தில் அல்லது ஊர் மட்டத்தில் என வரும். இப்படி பாhத்தாலும் முஸ்லிம்கள் திரளாக பெரும்பான்மையாக வாழும் மாவட்டம் திருகோணமலை, அம்பாரைதான். இது கிழக்கில்தான் உள்ளது.

அத்துடன் டொக்டர் சொல்வது போன்று உப பிறைக்குழு நியமிக்கப்பட்டால் அதனை கொழம்பு ஏற்றக்கெனாள்ளாத போது என்ன நடக்கும்? இதே பிளவு ஏற்படாதா? உலமா சபையின் கீழுள்ள கிண்ணியா உலமா சபையே தலைமையின் பேச்சைக்கேட்காத போது உப பிராந்திய பிறைக்குழு கேட்குமா? கேட்டால் அப்பிரதேச மக்கள் அவர்களை விடுவார்களா?

நான் எனது கருத்தில் மிகத்தெளிவாக சில விடயங்களை குறிப்பிட்டிருந்தேன். அதனை டொக்டர் விளங்குமளவு வாசிக்கவில்லை. அதாவது பிறை தென்படுவது பெரும்பாலும் கிழக்கில் என்பதாலும் பிறை, பெருநாள் விடயங்களில் கட்டியாக நின்று அதனை வீதி வீதியாக ஆராயும் பழக்கமும் கிழக்கில் மட்டும்தான் உள்ளது. ஏனைய மாகாணங்களில் முஸ்லிம்கள் தொட்டம் தொட்டமாக இருப்பதால் அவர்களிடம் இந்த ஆர்வம் மிக குறைவு மட்டுமன்றி சிங்கள மக்களால் அவர்கள் சூழவுள்ளதால் இதற்கான சாத்தியங்களும் குறைவு.

ஆகவேதான் கிழக்கு மாகாணத்தக்கென தனியான பிறைக்குழு தேவை. இதன் மூலம் முஸ்லிம்களை பிரிப்பதாக முடியாது. முஸ்லிம் காங்கிரசினால் கிழக்கு மாகாணத்துக்கென தனியான முஸ்லிம் மாகாண சபை என அஷ்ரப் கூறியபோது இப்படித்தான் சிங்கள கட்சிகளில் இருந்த முஸ்லிம்கள் எகிறினார்கள். அதே போன்றுதான் எனது கருத்துக்கும் எதிராக எகுறுகுறார்கள். இதற்கும் பிரதான காரணம் ஒரு மட்டக்களப்பான் பெரியாளாவதா என்பதுதான். இதனை அவர்கள் பகிரங்கமாகவே பேசினார்கள்.

அன்று தெற்கு முஸ்லிம் தலைமைகள் முஸ்லிம் மாகாண சபைக்கு ஆதரவளித்திருந்தால் இன்று பல பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாம்.



கிண்ணியாவில் பிறை காணப்படுவதால் ஏன் கல்முனையில் பிறைக்கழ என கேட்டிருந்தார். இவருக்கு கிழக்கு மாகாணத்தின் பூகோளம் தெரியாது போலும். குல்முனை கிழக்கக்கு மதியில் உள்ளது. குல்முனையிலிருந்து வடக்கே கிண்ணியா சுமார் இரண்டரை மணி நேர பயணம். அதே பேல் தெற்கே பொத்துவில் சுமார் ஒன்றரை நேர பயணம். குpண்ணியாவில் பிறைக்குழு இரந்தால் பொத்துவில் வரையான மௌலவிமார் அங்கு சென்று கூடவது சாத்தியமில்லை.



தலைமைக்கு எதிராக கருத்தச்சொல்வது முஸ்லிம்களை பிளவு படுத்தும் செயல் என்றால் உமர் (ரழி) அவர்கள் கருத்துக்கெதிராக ஒரு பெண் சத்தமிட்டிருக்க மாட்டாள். உமராவது தவறுதலாக கூறியிருந்தார். ஆனால் அ இ உலமா சபையோ வேண்டுமென்றே இந்த முடிவை எடுத்தது என்பதே பெரும்பாலான முஸ்லிம்களின் கருத்தாகும். நான் ஒன்றும் ஒளிந்திருந்து கொண்டு புணை பெயரில் என் கருத்தை எழுதவில்லை. பகிரங்கமாக எழுதியுள்ளேன். எனது மார்க்கரீதியலான கருத்துக்கு மௌலவி ஒருவர் விவாதிக்க முன் வந்தால் அது பொருத்தமாக இருக்கும். உலமா சபையினர் கூட என்கருத்துக்கு எதிராக பேச முடியாமல் தடுமாறுகிறார்கள். அவர்களில் பலர் என்னை நேரடியாக காணும் போது எனது கருதம்தை சரி காண்கிறார்கள்.

ஒரு டொக்டரிடம் மருத்துவம் பற்றி நான் விவாதித்தால் அவர் எற்றுக்கொள்வாரா? நானா டொக்டர் நீங்களா டொக்டர் என கேட்க மாட்டாரா? பல டொக்டர்கள் அவ்வாறு கேட்டுள்ளார்கள்.

ஆகவே மக்கா பிறை சாத்தியமா இல்லையா என்பது பற்றி டொக்டர் அவர்கள் மதுரசாவுக்கு சென்று மௌலவியாகிய பின் அவருக்கு நான் சொல்வது விளங்கும். மார்க்கத்தில் தெளிவான படிப்பு இன்றி மார்க்கம் பற்றி கருத்துத்தெரிவிப்பது தவிர்க்கப்பட வேண்டும். நான் இன்னும் பகிரங்கமாக கூறுகிறேன். மக்கா பிறை பற்றி எந்த மௌலவியுடனும் நான் நேரடி விவாதத்துக்கு தயார். அவர்கள் தயாரா என்பதுதான் எனது கேள்வி.

எது எப்படியிருப்பினும் இது சம்பந்தமான எனது விரிவான கட்டுரை இன்ஷா அள்ளா விரைவில் வெளிவரும். குறிப்பாக பிறை விவகாரம் என்பது பூகோள. விஞ்ஞான என்பதற்கப்பால் ஹதீதுகளுடன் சம்பந்தப்பட்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எனது இக்கருத்து இப்போதைக்கு ஏற்றக்கொள்ளப்பட மாட்டாது என்பதும் இன்னும் பல வருடங்கள் செல்லும் என்பதும் எனக்குத்தெரியும்.



இன்னொரு விடயம். இலங்கை முஸ்லிம்கள் அனைத்து விடயங்களுக்கும் கொழும்பைத்தான் தலைமையாக கருத வேண்டுமா? உலமா சபைக்கும் கொழும்புதான் தலைமை. தப்லீக், தவ்ஹீத், ஜமாஅதே இஸ்லாமி, தரீக்கா, அரசியல் என அனைத்துக்கும் கொழும்புதான் தலைமையா? அப்படியென்றால் கிழக்கு மக்கள் மொக்கர்களா?

இது பிரதேச வாதத்தில் நான் கூறும் கருத்தல்ல. மார்க்க அடிப்படையிலாகும். ஒரு கறுப்பு அடிமை கூட இந்த சமூகத்துக்கு தலைமை தாங்க முடியும் என இஸ்லாம் தெளிவாக்க ஒரு கிழக்கானை தலைமையாக்க ஏன் இவர்களால் இன்னமும் முடியவில்லை. கிழக்கில் படித்தவர்கள் இல்லை முட்டாள்களே உள்ளார்கள் என சொல்ல வருகின்றீர்களா?

- மௌலவி முபாறக் அப்துல் மஜீத், கபூரி,? நத்வி, பீ ஏ மதீனா. (அறபு மொழியில் பத்தரிகை துறை பட்டம் பெற்ற முதல் இலங்கையர், மதீனாவில் அச்சிடப்பட்ட அல்குர்ஆன் தமிழ் தர்ஜமா மொழிபெயர்ப்பாளர்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :