மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியருக்கு, தர்மஅடி

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியருக்கு, தர்மஅடி கொடுத்து பொலிசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பிரிவில் பேராசிரியராக பணிபுரிபவர் மோகன், 50.

இவர், மாணவிகள் இருவரிடம் தவறான எண்ணத்தில் பழகி எஸ்.எம்.எஸ்., மூலம் அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதுபற்றி இரு மாணவியரும், பெற்றோரிடம் கூறினர். நேற்று, இரு மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், கல்லூரி முடிந்து பேராசிரியரை சந்திக்க காத்திருந்தனர்.

மாலை வகுப்பு முடிந்து, மாணவியர் இருவரையும், தன் அறைக்கு வரும்படி அழைத்த பேராசிரியர் மோகன், அவர்களிடம், பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

அதிர்ச்சியடைந்த மாணவிகள் அழுது கொண்டே வெளியேறி, பெற்றோரிடம் தெரிவித்தனர்.

ஆத்திரமடைந்த உறவினர்கள், பேராசிரியர் அறைக்குள் சென்று மோகனுக்கு, தர்மஅடி கொடுத்து, அண்ணாமலை நகர் பெலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

முறைப்பாட்டையடுத்து பொலிஸார் வழக்கு பதிந்து, பேராசிரியர் மோகனை கைது செய்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :