இலங்கைக்கு தென்னாபிரிக்கா பதிலடி


கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில்  நேற்றுஇடம்பெற்ற இலங்கை - தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது ருவென்டி ருவென்டி போட்டியில் தென்னாபிரிக்க வீரர்கள் அபார திறமையை வெளிப்படுத்தி இலங்கை அணியை 12ஓட்டங்களால் தோற்கடித்துள்ளது.

போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து115 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

தென்னாபிரிக்கா சாரபில் ஜேபி.டுமினி 51 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் சேனாநாயக்க 3 விக்கெட்களை வீழ்த்தினார். அத்துடன் லசித் மாலிங்க ருவென்டி ருவென்டி போட்டிகளில் இன்று தனது 50வது விக்கெட்டினை வீழ்த்தினார்.

பதிலுக்கு 116 என்ற இலகுவான வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 103 ஒட்டங்களை மாத்திரமே பெற்று 12ஓட்டங்களால் தோல்வியடைந்துள்ளது.

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் எவரும் கைகொடுக்காத நிலையில் குமார் சங்கக்கார மாத்திரம் இறுதிவரை போராடி ஆட்டமிழக்காமல் 59ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் தென்னாபிரிக்கா சார்பில் அரைசதம் கடந்த டுமினி 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதன்படி மூன்று போட்டிகள் கொண்ட ருவென்டி ருவென்டி தொடரில் தென்னாபிரிக்கா ஒன்றுக்கு பூச்சியம் என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :