மகளின் காதலை பிரிக்க இயக்குனர் சேரன் சதி செய்கிறாரா?

ங்களின் காதலை பிரிக்க இயக்குனர் சேரன் சதி செய்து வருகிறார் என்று தாமினியின் காதலன் சந்துரு கூறியுள்ளார். 

இயக்குனர் சேரன் பொலிஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்து புகார் அளித்தார். அதில் தாமினியின் காதலன் சந்துரு மீது குற்றச்சாட்டுக்களை கூறி இருந்தார்.

அதில், 3 பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருந்தது. தனது மகள் தாமினியின் பேஸ்புக் விஷயங்கள் அனைத்தும் அவரது கட்டுப்பாட்டில் வைத்து இருந்தார்.

தன்னை வைத்து படம் எடுக்க வேண்டும் அல்லது பெரிய தொகையை தனக்கு தர வேண்டும். இல்லை என்றால் உனது குடும்பத்தை அசிங்கப்படுத்தி விடுவேன் என்று சந்துரு மிரட்டியதாக சேரன் புகாரில் கூறி இருந்தார்.

மேலும் தாமினி பற்றி பேஸ்புக்கில் ஆபாசமான தகவல்களை வெளியிடுவேன் என்று சந்துரு மிரட்டியதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த புகாரில் சந்துரு மீது பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தன் மீது கூறப்பட்ட குற்றசாட்டு குறித்து சந்துரு கூறுகையில், ‘‘சினிமாவில் டான்சராக உள்ளேன். மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன். என்னை பற்றி தவறான பல தகவல்களை சேரன் கூறி உள்ளார்.

நான் குடிகாரன், சினிமா துறையில் இல்லாதவன் என்றும் பல பெண்களுடன் எனக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறியுள்ளார். என்னைப் பற்றி தாமினிக்கு நன்கு தெரியும். நான் நல்லவன் இல்லை என்று அவர் கூறட்டும்.

எங்கள் இருவரையும் பிரிப்பதற்கு இயக்குனர் சேரன் சதி திட்டம் தீட்டி வருகிறார். நாங்கள் இருவருமே சேர்ந்து வாழ விரும்புகிறோம். எனவே, பொலிசார் எங்களை சேர்த்து வைக்க வேண்டும்’’ என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :