.jpg)
இயக்குனர் சேரன் மகள் தாமினியின் காதலர் சந்துரு, பணத்துக்கு ஆசை பட்டு காதலித்தேன் என்று கூறுகிறார்கள், அது உண்மையாக இருந்தால் நான் முன்பே தாமினியை மணம் புரிந்திருப்பேன் என்று கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது...
நான் மோசடி செய்துவிட்டதாக தாமினியின் தந்தை இயக்குனர் சேரன் என் மீது புகார் கூறியுள்ளார். நான் மோசடி செய்துவிட்டேன் என்று தாமினி கூறட்டும் பார்க்கலாம். அவர் அப்படி கூறமாட்டார், காரணம் நாங்கள் இருவரும் இன்னும் மனப்பூர்வமாக காதலிக்கிறோம்.
நாங்கள் குற்றப்பின்னணி உள்ளவர்கள் என்று இயக்குனர் சேரனும், அமீரும் கூறியிருப்பது எங்களுக்கு அதிர்ச்சிகரமாக உள்ளது. எங்கள் சகோதரி 4 பேருக்கும் திருமணமாகி அவரவர் குடும்பத்தில் வசித்து வருகின்றனர். இப்படியிருக்கையில் எங்களை குற்றப்பின்னணி உள்ளவர்கள் என்று அமீர் எப்படி கூறலாம்?
பணத்திற்கு ஆசைப்பட்டிருந்தால் நான் தாமினியை எப்போதோ மணம் புரிந்திருப்பேன், நான் என் சொந்த முயற்சியில் நடிகராக விரும்பினேன், சேரனின் நண்பர் எழில் என்னை ஸ்க்ரீன் டெஸ்ட் கூட எடுத்துள்ளார். தாமினிதான் என்னை இயக்குனர் எழிலிடம் அனுப்பி வைத்தார். நடந்தது இதுதான்.
கடந்த 10ம் திகதி தாமினி எனக்கு எதிராக கொடுத்ததாக கூறிய புகாரில் உண்மையில்லை. வெற்றுத் தாளில் கையெழுத்துப் பெற்றுக்கொண்டு வேறு யாரோ இந்தப் புகாரை செய்துள்ளனர்.
தாமினியின் சகோதரி நிவேதாவுக்கு நான் அவரைக் காதலிப்பதாக அனுப்பிய தகவல் விளையாட்டுதானே தவிர வேறு அல்ல. இதனை அவர்கள் இருவருமே நன்கு அறிவார்கள்.
ஆனால் இதனை அவரது தந்தை திரைக்கதை எழுதுவது போல் திரித்து என்னைக் கெட்டவனாக சித்தரித்துள்ளார்.
சேரனுக்கு எதிராக தாமினி புகார் கொடுத்ததிலிருந்தே அவர் தன் தந்தையை நம்பத் தயாராக இல்லை என்று தெரிகிறது.
தாமினி என் பக்கம் இருப்பதை எனக்கு வாய்ப்பளித்தால் நிருபிப்பேன். இவ்வாறு கூறினார் சந்துரு.

0 comments :
Post a Comment