ஏ.எல்.எம்.நயீம்
கிழக்கு மாகாண சபையின் மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண விவசாய கால்நடை, கைத்தொழில், மீன்பிடி, சுற்றுலாத்துறை அமைச்சின் கண்காட்சியும் விற்பனையும் எதிர்வரும் 18,19,20 ஆம் திகிதிகளில் ஏறாவூர் ரகுமானியா வித்தியலாத்தில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண விவசாய,கால்நடை உற்பத்தி அபிவிருத்தி,கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி,மீன்பிடி, சுற்றுலாத்துறை அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காஹங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்கள் பத்திரிகைகளுக்கு விடுத்துள்ள செய்தியில் தெரிவித்தார்.
மேலும் அவர் தனது செய்தியில்
அதனோடு இணைந்த திணைக்களங்களின் ஆதரவுடன் ஆகஸ்ட் 18,19,20 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு ஏறாவூர் நகரில் நடைபெறும்; மாபெரும் விவசாய, கால்நடை, கைத்தொழில், மீன்பிடி, சுற்றுலாத்துறை கண்காட்சி தொடர்பாக இச்செய்தியினை வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். இம்மாகாணத்தின் விவசாய அமைச்சர் என்ற வகையில், இம்மாகாணத்தினதும் இந்நாட்டினதும் மொத்தத் தேசிய உற்பத்தியில் விவசாய, கால்நடை, கைத்தொழில், மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறையின் பங்களிப்பினை நான் பெருமையுடன் நினைவு கூருகின்றேன்.
அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் மகிந்த சிந்தனையின் தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைவாகவும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பசில் ராஜபக்ஷ, கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ மொஹான் விஜேயவிக்கிரம மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் ஆகியோரின் ஆதரவுடனும், அனுசரனையுடனும் விவசாயம் மற்றும் மேற்படி துறைசார்ந்த அபிவிருத்தி நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து வழிநடாத்தும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சானது இக்கண்காட்சியினூடாக குறிப்பிட்ட துறைகள் சார் நவீன உபாயங்களையும்,
தொழில்நுட்பங்களையும் கிழக்கு மாகாண விவசாயிகள், கால்நடையாளர்கள், கைத்தொழிலாளர்கள், மீனவர்கள் மற்றும் உல்லாசப் பயணத் துறையினர் மத்தியில் பிரபல்யமடையச் செய்வதனையும், அவர்களது உற்பத்திப் பொருட்களுக்கான புதிய சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதனையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதன் மூலம் குறிப்பிட்ட துரைறசார் பயனாளிகள் பல சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு இம்மாகாணத்தின் பொருளாதாரத்தினையும், வாழ்க்கைத் தரத்தினையும் மேம்படுத்துவதுடன் நாட்டின் தேசிய உற்பத்தியினை அதிகரித்து தேசிய ரீதியில் தன்னிறைவுப் பொருளாதாரத்திற்கு கிழக்கு மாகாணம் வலுச் சேர்க்கும் என்பதனை பெருமையுடன் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். இக்கண்காட்சி தனது முக்கிய இலக்கை வெற்றிகரமாக எட்டும் என்பதில் பூரண நம்பிக்கை உடைய நான் இக்கண்காட்சியினை ஏற்பாடு செய்த விவசாய அமைச்சு, துறைசார் திணைக்களங்கள்,
மற்றும் ஏனைய திணைக்களங்கள், தனியார் நிறுவனங்கள், வர்த்தக சம்மேளனங்கள் ஆகியோருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறார்.

0 comments :
Post a Comment