கட்சியின் அரசியல் உச்சபீடத்தில் இருந்து நீக்கப்பட்ட ஆப்தீன் எஹியா, ஏ.எல்.எம். மில்ஹான், எஸ்.எச்.ஏ. கரீம், எம்.கே.எஸ் முனாஜித், எம்.எச்.எம். நஜாத் ஆகியோருக்கே செயலாளரினால் இவ்வாறு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தற்போது நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தல்களுக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்புமனுக்களின் வேட்பாளர் பட்டியல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் புத்தளம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் தாங்கள் வேறாக கையொப்பமிட்டுள்ளதாக அறியக்கிடக்கிறது.
இத்தேர்தல்களில் தாங்கள் மனுத்தாக்கல் செய்துள்ள மாவட்டங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து மரச்சின்னத்தில் போட்டியிடுவதற்காக எடுத்துள்ள முடிவை தாங்கள் உதாசினம் செய்துள்ளதுடன் கட்சியின் யாப்பையும் கட்டுப்பாட்டையும் மீறியுள்ளீர்கள்.
எனவே கட்சியின் யாப்பின் அடிப்படையில் தனக்குள்ள அதிகாரத்தினைப் பாவித்து தலைவரவர்கள் உடனடியாக அமுலாகும் வண்ணம் தாங்களை அரசியல் உச்சபீட உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியும், கட்சியின் அங்கத்துவத்திலிருந்து இடைநிறுத்தியும் உள்ளார் என்பதனை அறியத் தருகின்றேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment