(எம்.பைஷல் இஸ்மாயில்)
கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்வி பணியகமும், பிளான் ஸ்ரீலங்கா நிறுவனமும் இணைந்து ஒரு கோடி ருபா நிதியுதவியில் தயாரிக்கப்பட்ட கை நூல் வெளியீட்டு விழா (13) செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் ஈஸ்ற் லகூன் ஹோட்டலில் இடம்பெற்றன.
கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆரம்ப பிள்ளை பருவ கல்வி அபிவிருத்திக்கான கற்பித்தலுடனான செயற்பாடுகள் மற்றும் ஆசிரியர்களுக்கான வழிகாட்டல், கல்வி தொடர்பான கோட்பாடுகளும் பின்னணிகளும் என்ற மூன்று கைநூல்களின் வெளியீட்டு நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் கலந்து கொண்டார்.
இதில் கௌரவ அதிதிகளாக பிளான் ஸ்ரீலங்காவின் இலங்கைக்கான பிரதிநிதி; எட்வாட் நெட் எஸ்.பி, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன, வீடமைப்பு நிர்மான நீர் வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வையும், சிறப்பு அதிதிகளாக மாகாண சபை உறுப்பினர்களான எம்.எல்.ஏ.அமீர், பாறூக் முஹம்மது சிப்லி, கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்வி பணியகத்தின் தவிசாளர் பொன்.செல்வநாயகம், மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்ஸார், மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டடு சிறப்பித்தனர்.


0 comments :
Post a Comment