அனைத்துப் பகுதியிலும் உள்ள மஸ்ஜித்களிலும் கையெழுத்து திரட்டும் பணி


நோன்புப் பெருநாளுடன் இலங்கையின் அனைத்துப் பகுதியிலும் உள்ள மஸ்ஜித்களில் ஆரம்பித்து வைக்கப்பட்ட கையெழுத்து திரட்டும் பணி சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருகிறது.

ஏராளமான மஸ்ஜித்களின் நிருவாகிகள், இளைஞர்கள் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்ததுடன், பெருமளவிலான முஸ்லிம் ஆண்கள், பெண்கள் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பெருநாள் தொழுகை, ஜும்ஆவின் பின்னர், ஐவேளைத் தொழுகைகளின் பின்னரும் கையெழுத்துக்களைப் பெற்றுவருகின்றனர். பெண்களிடம் வீடுகளுக்குச் சென்று கையெழுத்துக்களைப் பெறப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ், இவ்வாறு இதுவரைக்கும் பல்லாயிரக்கணக்கான கையெழுத்துக்கள் பெறப்பட்டுள்ளன.

அதேவேளை, பல மஸ்ஜித்களுக்கு எமது கடிதங்கள் தாமதமாகிக் கிடைக்கப்பெற்றதாகவும், இன்னும் சிலவற்றுக்கு இதுவரைக்கும் கிடைக்கவில்லை எனவும் அறியக்கூடியதாகவுள்ளது. அவ்வாறு கிடைக்கப்பெறாதவர்கள் எமது இணையத்தளமான www.nationalshoora.com இலிருந்து இது தொடர்பான ஆவணங்களை பெற்றுக்கொள்ளலாம்.

இலங்கையின் மூலை முடுக்கெங்கிலுமுள்ள அனைத்து மஸ்ஜித்களையும் இச்செய்தி சென்றடைந்து, இம்மகஜரில் அதிகூடிய கையெழுத்துக்களைப் பெறவேண்டும் என்பதே ஸ்ரீ லங்கா முஸ்லிம் பேரவையின் இலக்காகும்.

எனவே, பெருநாள் தினத்துடன் ஆரம்பித்து வைக்கப்பட்ட இவ்வேலைத்திட்டம், இன்ஷாஅல்லாஹ், தொடர்ந்து நடைபெறும். இதனடிப்படையில் கையெழுத்துக்களைப் பெற்றுக்கொள்ளத் தவறிய மஸ்ஜித்களில் எதிர்வரும் 16/08/2013 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர் விஷேட ஏற்பாடுகளைச் செய்யுமாறு மஸ்ஜித் நிருவாகிகளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் பேரவை மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறது.

 இயன்றவரை பெண்களின் கையெழுத்துகளைப் பெறுவதற்கும் ஏற்பாடு செய்யவும். ஊர்மட்டங்களிலுள்ள இஸ்லாமிய அமைப்புகள், நிறுவனங்கள், வாலிப சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள் என்பன மஸ்ஜித் நிருவாகத்துடன் இணைந்து இப்பணியை மேற்கொள்வதன் மூலம் வெற்றிகரமாக செய்துமுடிக்கலாம்.

அனைத்து மஸ்ஜித்களிலிருந்தும் பெற்றுக்கொண்ட கையெழுத்துகளை நேரடியாக சேகரிக்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. எனவே, ஏற்கனவே நாம் குறிப்பிட்ட எமது முகவரிக்கு தபாலில் அனுப்புவதை இயன்றவரை தவிர்த்துக்கொள்ளுமாறு தயவாய்க் கேட்டுக்கொள்கிறோம். உங்கள் மஸ்ஜிதின் ஆவணத்தை கையளிக்க வேண்டிய எமது பிரதிநிதியின் விபரத்தைப் பெற்றுக்கொள்ள கீழ்வரும் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.

072-7377123 ( மத்திய, சப்ரகமுவ மாகாணங்களின் மஸ்ஜித்கள்)
077-2208774 (வடக்கு, கிழக்கு, வடமேல் மாகாணங்களின் மஸ்ஜித்கள்)
071-4886931 (ஊவா, தென் மாகாணங்களின் மஸ்ஜித்கள்)
077-5830172 (வடமத்திய, மேல் மாகாணங்களின் மஸ்ஜித்கள்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :