அமைச்சர் பஷீர் ஷேகுதாவுத்தை முஸ்லிம் காங்கிரஸிலிருந்து நீக்க நடவடிக்கை!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் அமைச்சருமான பசீர் சேகுதாவுத்தை கட்சியிலிருந்தும் தேசியப்பட்டியல் எம்.பி. பதவியிலிருந்தும் நீக்குவது மற்றும் அவரது அமைச்சுப் பொறுப்பை வாபஸ் பெறுமாறு அரசாங்கத்தைக் கோருதல் ஆகிய விடயங்கள் தொடர்பில் கட்சியின் உயர் அரசியல் பீட அங்கத்தவர்கள் கலந்தாலோசனை நடத்தியுள்ளனர் என்று நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மைக் காலமாக அவரின் அரசசார்பு போக்கு மற்றும் வடமாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பான தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்க மறுத்தமை போன்ற பிரதான காரணங்களை முன்வைத்தே இவர் நீக்கப்படவுள்ளார் என்றும் அந்த வட்டாரங்கள் கூறின.

இது இவ்வாறிருக்க, அமைச்சர் பஷீர் ஷேகுதாவுத்தை கட்சியிலிருந்து உடனடியாக நீக்காவிட்டால் தாம் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து வெளியேறப் போவதாக உயர்மட்ட உறுப்பினர்கள் அமைச்சர் ஹக்கீமை வலியுறுத்தியதுடன் காலக்கெடு விதித்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :