முஸ்லிம் சமுகம் இனியும் பொறுமை காக்க முடியாது

முஸ்லிம் சமுகம் இனியும் பொறுமை காக்க முடியாது. அதற்காக காடையர்கள்போல் யுத்தம்

செய்வதைவிட உறுதியான அகிம்சை வழியில் போராடவேண்டிய கட்டம் வந்துவிட்டது.

முதலில் எமது நாட்டிற்கு உதவிக்குமேல் உதவி செய்யும் முஸ்லிம் நாடுகளை எந்தவித

தாமதமும் இன்றி நாடவேண்டும் அவர்கள் மூலம் இந்த நாட்டு இனவாதிகளுக்கு பாடம்

புகட்டவேண்டுமே தவிர இலங்கையின் அரசையோ அல்லது இலங்கையின் அரசில் ஒட்டிக் கொண்டிருக்கும்

உதவாக்கரை அரசியல் வாதிகளையோ நம்பவேண்டியதில்லைஎன மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இந்தவகையில் அரசியல் கலப்பற்ற ஒரு முஸ்லிம் அமைப்பு ஒன்று மூத்த புத்தி ஜீவிகளை

உள்ளடக்கியதாக ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் எமது சமயத்திற்கும், சமயத்தளங்களுக்கும் தொடராக

மேற் கொள்ளப்பட்டு வரும் அடாவடித்தனங்களையும், அட்டூழியங்களையும் முடிவுக்கு கொண்டு வர

வைக்கவேண்டும் என கிறேன்பாஸ் பள்ளித் தாக்குதலைக் கேட்ட முஸ்லிம்கள் ஆதங்கப்படுகின்றனர்.

இருள் ஏற்பட்ட பிறகு இவ்வாறு கோழைத்தனமான தாக்குதல்களை செய்யும் காடையர்களை

ஊக்கப்படுத்தும் இந்த அரசில் இருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள் இருந்தென்ன இல்லாவிட்டால்

என்ன? என மக்கள் கொசமிடுகின்றனர்.

விகாரையில் மணியடித்து வன்முறை செய்யும் ஒரு மதஸ்த்தளத்தை அரசு அனுமதிவழங்கி அங்கு

இருக்கும் மதகுருக்கள் செய்யும் அடாவடித்தனத்தை ஏன் அரசு ஏற்றுக் கொள்கின்றது என மக்கள்

சந்தேகமும் கவளையும் கொண்டுள்ளது.

இதேவேளை அரசு நிலைமையை கட்டுப்படுத்த கிரேண்ட்பாஸ் பகுதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்

அமழுக்கு கொண்டு வரப்பட்டதாகவும் அதுவரை மக்கள் வீடுகளில் அமைதியாக இருக்குமாறு

கூறியதுடன் நாளை விஷேட கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படிக் கூட்டத்தில் அரச தரப்பில் மதஸ்தளம் என்ற அடிப்படையில் அதற்கான பாதுகாப்பும்.

அது செயற்படுவதற்கான உறுதிப்பாடும் வழங்கப்படுமா? என்ற ஐயத்தில் மக்கள் இருக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :