மட்டக்களப்பு, கல்லடி பாலத்தில் வாவிக்குள் இளம் பெண்னொருவர் குதிப்பு.

ட்டக்களப்பு, கல்லடி பாலத்தில் இருந்து தற்கொலை செய்ய முயன்ற இளம் பெண்ணை பொலிஸார் காப்பாற்றியுள்ளனர். 

இன்று மாலை கல்லடி பாலத்தில் இருந்து வாவிக்குள் இளம் பெண்னொருவர் குதித்துள்ளார்.

இந்த வேளையில் அப்பகுதியில் நின்றிருந்த பொலிஸார் வாவியில் குதித்தவரை காப்பாற்றியுள்ளனர்.

மாலை 05 மணி தொடக்கம் குறித்த பெண் அப்பகுதியில் சுற்றித்திரிந்த நிலையில் அவரை பொலிஸார் அவதானித்துக் கொண்டிருந்தபோதே அவர் வாவியில் குதித்த நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளார்.

குறித்த பெண் சுமார் 25 வயது நிரம்பியவர் எனவும் தாழங்குடா பிரதேசத்தினை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வாவியில் குதித்தவர் காப்பாற்றப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.

புதிய கல்லடி பாலத்தில் முதலாவது தற்கொலை முயற்சியாக இது பதிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :