திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் மோப்ப நாயின் உதவியால் கைது.

-எம்.பைஷல் இஸ்மாயில்-
க்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 4 சந்தேக நபர்களை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதாவன் உத்தரவிடப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்ட்ட 4 பேர்களையும் மோப்ப நாய்களின் உதவியுடன் அக்கரைப்பற்று பொலிசார் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.

அட்டாளைச்சேனை 16 ஆம் பிரிவு வட்டானை வீதியிலுள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டின் பின் கதவை உடைத்து ஒரு இலட்சத்தி எட்டாயிரம் (108,000.00) ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன், கையடக்கத் தொலைபேசியையும் குறிட்பிட்ட 4 பேரும் இணைந்து திருடிச் சென்றுள்ளதாக அறியமுடிகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :