எதிர் வரும் மாகாணசபைத் தேர்தலில் SLMC -TNA கட்சிகளின் நிலைப்பாடு என்ன.

டமாகாண சபைத் தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு நாளை (15) விடுக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

நேற்று (13) நடைபெறவிருந்த அக் கட்சியின் விசேட கூட்டம் நாளைவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார். 

வடமாகாண சபைக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக அக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா மற்றும் முன்னாளர் பிரதம நீதியரசர் விக்னேஸ்வரன் ஆகிய இருவரது பெயர்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரனே முதலமைச்சர் வேட்பாளர் என குறிப்பிட்டுள்ளனர். 

எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜாவையே அக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் தெரிவில் தொடர்ந்தும் இழுபறி நிலை காணப்படுகிறது. 

இதேவேளை எதிர்வரும் செப்டெம்பரில் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தல் தொடர்பான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் விசேட கூட்டம் ஒன்று நாளை (15) இடம்பெறவுள்ளது. 

நாளை (15) இரவு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைச் செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இக் கூட்டத்தின்போது, எதிர்வரும் செப்டெம்பரில் நடைபெறவுள்ள வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தலின் போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுவது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. 

இத் தேர்தலின் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :