கடற்கொள்ளையர்களால் 2010ஆம் ஆண்டு கடத்தப்பட்ட எம்.ஏ.அல்பெடோ என்ற கப்பல் சோமாலிய கடற்பரப்பில் மூழ்கியுள்ளது. இதன் காரணமாக அக் கப்பலில் இருந்த 6 கடற்கொள்ளையர்கள், இரு கப்பல் பணியாளர்கள் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
எனினும் கப்பலில் 23 பணியாளர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கப்பல் கடத்தப்படும்போது அதில் 07 பாகிஸ்தான் பிரஜைகள், 06 இலங்கை பிரஜைகள், 02 இந்திய பிரஜைகள் ஈரான் பிரஜை ஒருவர் இருந்துள்ளனர்.
இவர்களில் பாகிஸ்தான் பிரஜைகள் 7 பேரும் 1.1 அமெரிக்க டொலர்களை கப்பமாக வழங்கியதன் பின்னர் கடந்த 2012ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் கப்பில் இருந்த இந்திய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார் எனவும் அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
0 comments :
Post a Comment