அப்பிளுக்கு போட்டியாக கூகிளின் கண்டுபிடிப்பு

ணைய உலகின் ஜாம்பவானாக விளங்கி வருகின்ற கூகிள் நிறுவனம் தற்போது பரந்துபட்ட வகைகளில் தனது வியாபாரத்தளத்தினை விரிவுபடுத்தி வருகின்றது. அந்தவகையில் தொலைக்காட்சித்துறையில் புதிய மாற்றத்தினை ஏற்படுத்தும் வகையில் நவீன சாதனமொன்று கூகிள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்து வைக்கப்ட்டுள்ளது.

Chromecast என்று பெயரிடப்பட்டுள்ள குறித்த சாதனம் ஒரு சிறிய dongle இன் வடிவத்தை ஒத்ததாகும். தொலைக்காட்சிகளின் HDMI இணைப்பில் இணைத்துப் பயன்படுத்தத்தக்க வகையில் இச்சாதனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாவனையாளரர்கள் தமது கையடக்கத் தொலைபேசி, tablet மற்றும் கணணி ஆகியவற்றிலிருந்து streaming செய்வதன் மூலமாக தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்க முடியும்.

அப்பிள் நிறுவனத்தின் Apple TV தயாரிப்புக்கு நேரடிப் போட்டியாளராகக் களத்தில் குதித்துள்ள குறித்த புதிய சாதனமானது கம்பித்தொடர்பற்ற இணைய இணைப்பினைப் பயன்படுத்தி இயங்கக்கூடியதாகும். தற்போது அமெரிக்கச் சந்தைகளில் மட்டும் விற்பனைக்கு விடப்பட்டிருக்கும் குறித்த சாதனத்தின் விலையானது 35 அமெரிக்க டொலர்களாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும் குறித்த சாதனம் சர்வதேச சந்தையில் எப்போது விற்பனைக்கு விடப்படும் என்பது தொடர்பில் எதுவிதமான அறிவித்தலும் வெளியாகவில்லை.

குறித்த சாதனத்தின் அறிமுகத்துடன் சேர்த்து கூகிளின் Nexus 7 சாதனத்துக்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இன்னமும் சில வாரங்களில் Nexus 7சந்தைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Android இன் புதிய பதிப்பானJellybean 4.3 இனை உள்ளடக்கி வரவுள்ள முதலாவது சாதனம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Asus நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள Nexus 7 ஆனது 50g நிறையுடையதாக மெல்லியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிடத்தக்க வகையில்Nexus 7 இன் திரையானது 323 ppi துல்லியத்தினைக் கொண்டு காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பிள் நிறுவனத்தின் iPad Mini யின் திரைகளை விடவும் இது பல மடங்கு துல்லியம் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. Nexus 7 இன் விலை குறித்த அறிவிப்புகள் வெளியாகாத போதிலும், இதன் விலையானது முன்னைய Nexus சாதனத்தினை விடவும் 30 அமெரிக்க டொலர்கள் கூடியதாகக் காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. முன்னைய Nexus சாதனத்தின் விலை 229 அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டிருந்தது.

கூகிளின் இப்புதிய சாதனங்களின் அறிமுகம் எந்தளவுக்கு வெற்றியளிக்கப்போகின்றது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :