விஜயை பழிக்குப் பழி வாங்கத் துடிக்கும் வெங்கட்பிரபு.

ங்காத்தா வெற்றிக்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கும் படம் பிரியாணி. இப்படத்திற்கு இசை யுவன் சங்கர் ராஜா. இது அவருக்கு 100-வது படமாகும். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார். 

பிரியாணி படத்தை வரும் செப்டம்பர் 6ம் திகதி வெளியிட முடிவு செய்துள்ளனர். 

பிரியாணி படத்தின் புகைப்படங்கள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவை பெற்றதை தொடர்ந்து பிரியாணி படமும் ரசிகர்கள் மனதை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரியாணி படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு, முதலில் படத்தின் ஹீரோவாக விஜயை நடிக்க வைக்க திட்டமிட்டுயிருந்தார். ஆனால், அவரது கால்ஷீட் கிடைக்கவில்லையாம். 

அவருக்கு அடுத்து, கார்த்திக்கு தான் ஹீரோ கதாபாத்திரம் சரியாக பொருந்தும் என முடிவெடுத்த வெங்கட் பிரபு, கார்த்தியை படத்தின் ஹீரோவாக்கினார். இதனால், விஜய்க்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு கார்த்திக்கு கிடைத்தது.

விஜய்யிடம் இருந்து கால்ஷீட் கிடைக்காத ஏமாற்றத்தில் இருக்கும் வெங்கட்பிரபு, விஜய் நடிக்கும் தலைவா ரிலீஸ் தினத்தன்றே தனது பிரியாணி படத்தையும் வெளியிட்டு போட்டி போட முடிவு செய்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரியாணி படத்தின் வெற்றியை பார்த்து, இந்த மாதிரி அருமையான படத்தில் தன்னால் நடிக்க முடியவில்லை என விஜய் வருத்தப்படும் அளவிற்கு வெற்றி பெறவேண்டும் என்ற வெறியோடு உழைத்திருக்கிறாராம் வெங்கட்பிரபு
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :