புத்தகாயா- மகாபோதி குண்டு வெடிப்பு தொடர்பில் ஒருவர் கைது

ந்தியாவின் பீகார் மாநிலம், புத்தகாயாவில் உள்ள மகாபோதி விகாரைக்கு அருகில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தீவிரவாத அமைப்பொன்றுடன் தொடர்புடைய அன்வர் ஹுஷைன் என்ற பெயருடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டன் பின்னர் எதிர்வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

புத்தகாயா தொடர் குண்டுவெடிப்பு குறித்து இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைகளை ஆரம்பித்த நிலையில் இந்நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (07) அதிகாலை இந்தியாவின் பீகார் மாநிலம், புத்தகயாவில் உள்ள மகாபோதி விகாரைக்கு அருகில் 6 இடங்களில் தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றன.

பீகார் மாநிலம் புத்தகாயாவில் நேற்று காலை குண்டுகள் வெடித்த நிலையில், நேற்று மாலையே வழக்கம் போல் பௌத்த துறவிகள் வழிபாடுகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த வழிபாட்டில் கலந்து கொள்ள பெளத்த துறவிகளைத் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்திய தேசிய புலனாய்வுக் குழுவினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்ய வசதியாக, தடயங்கள் அழிக்கப்படாமல் இருக்கவுமே பிறருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக பாதுகாப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆனால், யாத்ரீகர்கள் அனைவரும் இன்று (08) முதல் புத்தகயா கோவிலுக்குள் வழக்கம் போல் சென்று வரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புத்தகாயா செல்வதை ஒரு வார காலம் தவிர்க்குமாறு இலங்கை யார்த்திரிகர்களை அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :