புத்தகயா தாக்குதலுக்கு ரவூப் ஹக்கீம் கண்டனம்

புத்தகயா மகா போதி விஹாரையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் வன்மையாக கண்டித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள கண்டனச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

பௌத்த மக்களின் புனித தளமாக மதிக்கப்படும் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள புத்தகயா விஹாரை தாக்கப்பட்டதையிட்டு எமது கட்சியின் சார்பில் பலத்த கண்டனத்தை வெளியிடுகிறேன்.

அதிர்ஷ்டவசமாக அங்கு மிகவும் பாரதூரமான பாதிப்புகள் ஏற்படாதது ஓரளவு ஆறுதலை அளிக்கிறது.

உலக நாடுகள் பலவற்றில் சமய வழிபாட்டுத் தளங்கள் மீது இவ்வாறான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எந்தவொரு சமயத் தலத்தின் மீதும் மேற்கொள்ளப்படும் இவ்வாறான தாக்குதல்களை எமது கட்சி ஒரு போதும் அனுமதிக்காது. இவ்வாறான செயல்களில் ஈடுபடும் நபர்களை சரியான முறையில் இனங்கண்டு, சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனை வழங்க வேண்டும்.

இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ஹக்கீம் தமது கட்சியின் சார்பில் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :