நாளை கட்டையாறு பொது பூங்காவுக்கான அடிக்கல் நாட்டு விழா


ழில் கொஞ்சும் திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேசம் இயற்கை வளங்களை அதிகம் கொண்டு விளங்குகின்றது. இதில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கிண்ணியா அமைந்துள்ளதை தற்போது காணக்கூடியதாகவுள்ளது.

கிண்ணியா நகரசபைக்கு நகரபிதாவாக தெரிவான டொக்டர் எம்.எம்.ஹில்மி தலைமையில் கிண்ணியாவை அழுகுபடுத்தும் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அதிக சுற்றுலா பயணிகளை கவரக்கூடியதாக மாறியுள்ளது.

இலங்கையில் பெயர் சொல்லும் அளவில் கிண்ணியா பாலம் அமைந்துள்ளதையும், அழகாக காட்சி தரும் கிண்ணியா மட்டக்களப்பு கடற்கரையோர வீதியும் குறிப்பிட்டுச் சொல்லும் அளவில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக கட்டையாறு – ஒரிகன் பாலத்திற்கு இடைப்பட்ட பகுதியில் அழகான தோற்றத்துடன் அமையவிருக்கும் கிண்ணியா பொழுது போக்கு பூங்காவினை சொல்லலாம்.

நாளை இடம்பெறவிருக்கும் கிண்ணியா கட்டையாறு பொழுது போக்கு பூங்காவுக்கான அடிக்கல் நாட்டு விழா கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் எம்.எம்.ஹில்மி தலைமையில் இடம்பெறவுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் புறநெகும வேலைத்திட்டத்தின் ஊடாக கிண்ணியா நகரசபை முன்னெடுக்கும் இவ்வேலைத்திட்டம் ஒரு கோடியே 70 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்படவிருக்கின்றது. இப்பொழுது போக்கு பூங்காவுக்கான திட்டம் இதுவரை கண்டிராத கனவாக உள்ளது. நகரபிதா டொக்டர் எம்.எம்.ஹில்மியின் சாதனைகளில் இவற்றினை மிக முக்கியமாக குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு இந்தப் பூங்கா காணப்படுகின்றது.

கிண்ணியாவின் கனவுகளில் ஒன்றான இவ்வாரான பூங்கா நகரபிதா ஹில்மியின் மூலமாக அமையவிருப்பதானது கிண்ணியா நகரபிதாவின் கடும் முயற்சியின் பயனாக கிடைத்துள்ளது. எந்த இடத்திலும் இவ்வாரான ஒரு பெயர் சொல்லும் அளவுக்கு கிண்ணியாவில் ஒரு வேலைத்திட்டத்தை உருவாக்கியே தீருவேன் என்று அடிக்கடி சொல்லும் நகரபிதா ஹில்மியின் நீண்ட நாள் கனவுக்கான பொழுது போக்கு பூங்காவுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நாளை அமையவிருக்கின்றது.

இவ்வடிக்கல் நாட்டு விழாவுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ ரியர் அட்மிரல் மொகான் விஜயவிக்ரம வருகை தரவிருப்பதோடு கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ நஜீப்.ஏ.மஜீத், பிரதியமைச்சர் கௌரவ சுசந்த புஞ்சிநிலமே, திருகோணமரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம்.எஸ்.தௌபீக், மாகாண சபை உறுப்பினர்கள், நகரசபை உறுப்பினர்கள் ஆகியோருடன் ஏராளமான அரச பிரமுகர்கள் அரச அதிகாரிகள், திணைக்கள செயலாளர்கள், புத்திஜீவிகள், உலமாக்கள், கல்விமான்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் இச்சிறந்த நகரபிதா ஹில்மியின் சாதனைத்திட்ட பூங்காவின் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ளவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :