ஊடகவியலாளர் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை சமூக மேம்பாட்டுக்கான தேசிய அமைப்பு வன்மையாக கண்டித்துள்ளது

( எஸ்.அஷ்ரப்கான் )
ஊடகவியலாளர் முர்தளாவின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைஇஸ்லாமிய சமூக மேம்பாட்டுக்கான தேசிய அமைப்பு வன்மையாக கண்டிப்பதாகதெரிவித்துள்ளது.

.இது தொடர்பாக சங்கச்செயலாளர் எஸ் முபாறகினால் வெளியிடப்பட்டுள்ள ஊடகஅறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஊடகவியலாளர்கள் தமது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கப்பபால்
பொதுநலமிகளாக நின்று சமூகத்திற்காக சேவை செய்கின்ற வேளையில் தனிப்பட்டநபர்களின் விருப்பங்களுக்கு செவிசாய்க்க முடியாது.

நடுநிலையான,உண்மைத்தன்மையான செய்திகளை வெளிப்படுத்தும் போது
அவர்கள் தாக்கப்படுவதும், அவர்களது உடமைகள் சேதமாக்கப்படுவதும் வன்மையாககண்டிக்கப்பட வேண்டியதாகும்.

குறித்த ஊடகவியலாளரினால் ஊடகமொன்றிற்கு எழுதப்பட்ட செய்தியினை தொடர்ந்துஇந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.வீட்டின் மீது தாக்குதல்மேற்கொண்ட சூத்திரதாரிகளை இனங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

எனினும்ஊடகத்துறையைப் பொறுத்தவரையில் இந்த செய்தியில் ஏதாவது பிழைகள்காணப்படுவதாக இருந்தால் செய்தியை உரிய ஊடக நிறுவனத்துடன் பேச்சு நடத்திமறுப்பறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்க முடியும். ஆனால் கீழ்த்தரமாகசட்டத்தை கையிலெடுத்து அடாவடிகளில் குறித்த நபரோ அல்லது அமைப்போ ஈடுபடுவது அநாகரீகமான செயலாகும்.

இந்த சம்பவத்தின் பின் புலத்திலிருப்பவர்களை சட்டத்தின் பிடியில்
சிக்கவைத்து தண்டனை கொடக்கப்பட வேண்டும்.

 அவ்வாறு செய்யத் தவறும்பட்சத்தில் ஊடகவியலாளர்களுக்கான பணியினை செய்வதற்கு அவர்களுக்கு போதியபாதுகாப்பு இல்லாமல் போகும்.

எனவே, இந்த காடைத்தனமான செயலை கண்டிப்பதுடன், எதிர்காலத்தில் இவ்வாறானசம்பவங்கள் இடம்பெறாமல் தடுக்கவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திடம் உள்ளதுஎனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் முர்தளாவின் வீட்டின் மீது இனந்தெரியாதேரினால் கடந்த
வியாழக்கிழமை (25) இரவு இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :