பி. முஹாஜிரீன்
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மூன்றாவது சர்வதேச ஆய்வு மாநாடு இன்று சனிக்கிழமை காலை (6) ஒலுவில் வளாகத்தில் ஆரம்பித்து வைக்கபட்டது.
உபவேந்தர் கலாநிதி எஸ்.எம். முகம்மது இஸ்மாயில் தலைமையில் ஆரம்பமான இவ் ஆய்வு மாநாட்டுக்கு பிரதம பேச்சாளராக இலங்கை மத்திய வங்கியின் உதவி ஆளுநர் கலாநிதி எச்.ஏ.கே. மச்சந்திர கலந்து கொண்டார்.
இவ் ஆய்வரங்க தொடக்க நிகழ்வில் பல்கலைக்கழக பதிவாளர் எச். அப்துல் சத்தார், இஸ்லாமிய கற்கைகள் அறபு மொழிப் பீடாதிபதி அஷ்ஷெய்க் ஏ.பி.எம். அலியார், மொழித் துறைத் தலைவர் கலாநிதி ரமீஸ் அப்துல்லா, நிதியாளர் குலாம் றஷீட் உட்பட துறைத் தலைவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டுப் பேராளர்களும் ஆய்வாளர்களும் பல்கலைக்கழக மாணவர்களும் கலந்து கொண்டனர்.
இரு நாட்கள் கொண்டதாக (06, 07) நடைபெறுகின்ற இச் சர்வதேச ஆய்வு மாநாட்டின் அறிக்கையும் உபவேந்தரிடம் கையளிக்கப்பட்டது.
0 comments :
Post a Comment