வட மாகாணசபை தேர்தலில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் - பெவ்ரல் அறிவிப்பு!

டமாகாணசபைத் தேர்தலில் 2000 தேர்தல் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த உள்ளதாக தேர்தல் கண்காணிப்பகமான பெவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. பெவ்ரல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரோகண ஹெட்டியாராய்ச்சி இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், இம்முறை வடமாகாண சபைத் தேர்தலில் சர்வதேச கண்காப்பாளர்களையும் ஈடுபடுத்தவுள்ளதாகத் தெரிவித்தார்.

அந்த வகையில் தாய்லாந்திலிருந்து 10 பேர் தேர்தல் கண்காணிப்புக்காக வரவழைக்கப்படவுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

அதேவேளை, கால் நூற்றாண்டிற்குப் பின் வட மாகாணத்தில் தேர்தல்கள் நடைபெறுவதால் தமது நிறுவனத்தால் தேர்தல் தொடர்பான பல நடமாடும் சேவைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அதன்படி மக்களுக்கு தேர்தல் தொடர்பான அறிவை வழங்கும் கருத்தரங்குகள் கபே நிறுவனத்தால் முன்னெடுக்கப்படுவதாகவும் அதன் இயக்குநர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :