பஸ்ஸில் பயணித்த பெண்ணை இடையில் இறக்கி தாக்கிய நபர் கைது


பெண் ஒருவரை கை, கால்களால் கடுமையாகத் தாக்கி பாலியல் ரீதியாக துன்புறுத்திய முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர் தங்கொட்டுவ - கோனவில பிரதேசத்தில் வசித்துவரும் 28 வயதான இளம் பெண் என பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் இருவருக்குமிடையில் ஒரு வருட காலமாக காதல் தொடர்புஇருந்ததாகவும் பின்னர் அப்பெண் காதல் தொடர்பை நிறுத்திக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 7ம் திகதி குறித்த பெண் பஸ்ஸில் சென்று கொண்டிருந்தபோது அவரது முன்னாள் காதலன் அப்பெண்ணை பஸ்ஸில் இருந்து இறக்கி கடுமையாகத் தாக்கியுள்ளார்.

இதன் பின்னதாக பலவந்தமாக ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துச் சென்று தம்மை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண் குற்றம் சுமத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் வழங்கிய முறைப்பாட்டிற்கு இனங்க சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மாதம்பே - பட்டியகம பிரதேசத்தைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதி என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் மாரவில நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள அதேவேளை வென்னப்புவ பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :