21 ஆவது திருத்தத்திற்கு எதிரான மனு நிராகரிப்பு

13 ஆவது திருத்தத்தை நீக்குவதற்காக கொண்டுவரப்பட்ட 21 ஆவது திருத்தத்திற்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரரினால் சமர்ப்பிக்கப்பட்ட 21 ஆவது திருத்தத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுதொடர்பிலான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நாடாளுமன்றத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை பிரதி சபைநாயகர் சந்திம வீரக்கொடி நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தமானது அரசியலமைப்பிற்கு முரணானது இல்லையென்றும் அதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் உயர்நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :